Tamil Catholic Prayers

செபமாலை

பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே -ஆமென்.

இறைவா எங்களுக்குத் துணையாக வந்தருளும் ஆண்டவரே எங்களுக்கு உதவி செய்ய விரைந்தருளும்.

பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக ஆதியில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக -ஆமென்.

அளவில்லாத சகல நன்மையும், சுரூபியுமாய் இருக்கிற எங்கள் சர்வேசுராசாமி நீச மனுசருமாய் நன்றியறியாத பாவிகளுமாய் இருக்கிற, அடியோர்களது மட்டில்லாத மகிமை பிரதாபத்தைக் கொண்டிருக்கிற தேவரீருடைய திருச் சந்நிதிலே இருந்து ஜெபம் பண்ணப் பாத்திரமாகாதவர்களாயிருந்தாலும், தேவரீருடைய அளவில்லாத தயவை நம்பிக்கொண்டு தேவரீர்க்குத் ஸ்துதி வணக்கமாகவும் அர்ச்சிஸ்ட தேவ மாதாவிற்குத் தோத்திரமாகவும் ஐம்பத்து மூன்று மணி ஜெபம் செய்ய ஆசையாய் இருக்கிறோம். இந்த ஜெபத்தை பக்தியோடே செய்து, பராக்கில்லாமல் முடிக்கத் தேவரீருடைய ஒத்தாசையைக் கட்டளை பண்ணியருளுங்கள் சுவாமி.- ஆமென்

விசுவாசப் பிரமாணம்
பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்தார். போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். பரலோகத்திற்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கம் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன். பாவப்பொறுத்தலை விசுவசிக்கிறேன். சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். -ஆமென்.

பெரிய மணி :
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக.உம்முடைய இராட்ச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.எங்களைச் சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.

மூன்று சிறிய மணிகள் :
அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்வர்நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே. அர்ச்சிஸ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.

மூன்று சிறிய மணிகளுக்குப் பின் (திரித்துவ துதி) :
பிதாவுக்கும், சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. -ஆமென்.

ஒவ்வொரு மறை நிகழ்ச்சியாகச் சொல்லித் தியானிப்போம்.

ஒரு பர. 10 அருள். ஒரு திரி. சொல்வோம்.
ஒவ்வொரு பத்து மணிகள் முடிந்ததும் :

ஓ என் இயேசுவே!
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும்.
எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும்.
உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ,
அவர்களுக்குச் சிறப்பான உதவி புரியும்.


மகிழ்ச்சி மறைபொருள்கள் (திங்கள், சனி)

1. கபிரியேல் தூதர் கன்னிமரியாவுக்குத் தூதுரைத்ததைத் தியானித்து, தாழச்சியுடன் வாழ வரம் கேட்போமாக.
2. இறையன்னை எலிசபெத்தைச் சந்தித்ததைத் தியானித்து, பிறரன்பில் வளர்ச்சிக்காக செபிப்போமாக.
3. இயேசு பிறந்ததைத் தியானித்து, எளிமையை விரும்பி ஏற்று வாழும் வரம் கேட்போமாக.
4. இயேசுவைக் கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை தியானித்து, இறைவனின் திருவுளத்துக்குப் பணிந்து நடக்க வரம் கேட்போமாக !
5. காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்ததை தியானித்து, நாம் அவரை எந்நாளும் தேடி நிற்கச் செபிப்போமாக.


ஒளியின் மறைபொருள்: (வியாழக் கிழமை)

1. இயேசு யோர்தான ஆற்றில் திருமுழுக்கு பெற்றதை தியானிப்போமாக !
2.கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியதை தியானிப்போமாக !
3. இயேசு விண்ணரசை பறைசாற்றியதை தியானிப்போமாக !
4. தாபோர் மலையில் உருமாற்றம் பெற்றதை தியானிப்போமாக !
5. இயேசு கடைசி இரா விருந்துண்டதையும் நற்கருணை ஏற்படுத்தியதையும் தியானிப்போமாக !


துயர மறைபொருள்கள் ( செவ்வாய், வெள்ளி)

1. இயேசு இரத்த வியர்வை சிந்தியதைத் தியானித்து, நம் பாவங்களுக்காக மனத்துயர் அடைய செபிப்போமாக!
2. இயேசு கற்றூணில் கடடுண்டு அடிப்பட்டதைத் தியானித்து, புலன்களை அடக்கி வாழும் வரம் கேட்போமாக!
3. இயேசு முள்முடி தரித்ததைத் தியானித்து, நம்மையே ஒறுக்கவும், நிந்தை தோல்விகளை மகிழ்வுடன் ஏற்கவும் செபிப்போமாக!
4. இயேசு சிலுவை சுமந்து சென்றதைத் தியானித்து, வாழ்க்கைச் சுமையை பொறுமையோடு ஏற்று வாழச் செபிப்போமாக!
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்ததைத் தியானித்து, இயேசுவை அன்பு செய்யவும், பிறரை மன்னிக்கவும் வரம் கேட்போமாக!


மகிமை மறைபொருள்கள் ( புதன், ஞாயிறு )

1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து, உயிருள்ள விசுவாசததுடன் வாழ செபிப்போமாக!
2. இயேசுவின் விண்ணேற்றத்தைத் தியானித்து, நம்பிக்கையுடன் விண்ளக வாழ்வைத் தேடும் வரம் கேட்போமாக!
3. தூய ஆவியாரின் வருகையைத் தியானித்து, நாம் அனைவரும் ஆவியாரின் ஒளியையும் அன்பையும் பெற செபிப்போமாக!
4. இறையன்னையின் விண்ணேற்பைத் தியானித்து, நாமும் விண்ணக மகிமையில் பங்குபெற செபிப்போமாக !
5. இறையன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப் பெற்றதைத் தியானித்து, நம் அன்னையின் மீது ஆழ்ந்த பக்தி கொள்ள செபிப்போமாக !

முடிக்கிற வகையாவது

அதிதூதரான புனித மிக்கேலே, தேவதூதர்களான புனித கபிரியேலே, அப்போஸ்தலர்களான புனித இராயப்பரே, சின்னப்பரே, அருளப்பரே நாங்கள் எத்தனை பாவிகளாயிருந்தாலும், நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த ஜம்பத்து மூன்று மணிசெபத்தையும் உங்கள் தோதிரங்களோடே ஒன்றாகக் கூட்டி புனித தேவமாதாவின் திருப்பாதத்தில் பாதகாணிக்கையாக வைக்க உங்களைப் பிராத்தித்துக்கொள்கிறோம். ஆமென்.

மங்கள வார்த்தை செபம்

அருள் நிறைந்த மரியே வாழ்க!
கர்த்தர் உம்முடனே;
பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே;
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய
இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.

அர்ச்சிஷ்ட மரியாயே சர்வேசுரனுடைய மாதாவே,
பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும்
எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்.
ஆமென்.

கிறிஸ்து கற்பித்த செபம்

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக;
உம்முடைய இராச்சியம் வருக;
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல
பூலோகத்திலும் செய்யப்படுவதாக.

எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.
எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களை சோதனையில் விழவிடாதேயும்,
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

ஆமென்.

விசுவாசப் பிரமாணம்

பரலேகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சருவேசுரனை விசுவசிக்கின்றேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாயகன் இயேசுகிறிஸ்துவையும் விசுவசிக்கின்றேன்.இவர் பரிசுத்த ஆவியினால் கற்பமாய் உற்பவித்து கன்னிமரியாளிடம் இருந்து பிறந்து போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டு பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடம் இருந்து உயிர்த்தெழுந்தார்.பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சருவேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கின்றார்.அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுதீர்க்கவருவார்.பரிசுத்த ஆவியை விசுவசிக்கின்றேன்.பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன்.புனிதர்களின் சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கின்றேன். பாவப் பொறுத்தலை விசுவசிக்கின்றேன். சரிர உத்தானத்தை விசுவசிக்கின்றேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கின்றேன். ஆமென்.

திரித்துவப் புகழ்

பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்தது போல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.

ஓ என் இயேசுவே எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து இரட்சித்தருளும். சகல ஆத்துமாக்களையும் பரலோக பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் அதிகமாய் வேண்டியவர்களுக்கு விசேட உதவி செய்தருளும்.


சிலுவைப்பாதை

திருச்சிலுவைப் பாதை தொடக்க செபம்

முதல்வர்:பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே, ஆமென்!

எல்லோரும்:இரக்கத்தின் ஊற்றே இறைவா, உம் திருமகன் இயேசுவின் பாடுகளையும் இறப்பையும் நாங்கள் நினைவு கூர்கின்றோம். அவர் நடந்துசென்ற சிலுவையின் பாதையில் அவரைப் பின்சென்று நடந்திட நாங்கள் வந்துள்ளோம். இறுதிவரை இயேசுவின் உண்மைச் சீடராக நாங்கள் வாழ வரமருள வேண்டுமென்று உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம். ஆமென்!

சுருக்கமான உத்தம மனஸ்தாப ஜெபம்:
என் இறைவா! நன்மை நிறைந்தவர் நீர். அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவர். என் பாவங்களால் உம்மை மனநோகச் செய்துவிட்டேன். ஆகவே நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும் , நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும் மனம் நொந்து வருந்துகிறேன்.உமது அருள் துணையால் நான் மனம் திரும்பி, இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொடுக்கிறேன்.எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக, இறைவா, என்மேல் இரக்கமாயிரும்.

திவ்விய இயேசுவே! எங்களுக்காகவும் உத்தரிப்புநிலை ஆன்மாக்களுக்காகவும் சிலுiவைப் பாதையைத் தியானிப்பவர்களுக்கு அளிக்கப்படும் பலன்களை அடைய விரும்பி, உம் இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.

புனித மரியாவே! வியாகுல அன்னையே! இயேசுவின் பாடுகளின் போது அவரோடு நீர் உடனிருந்து, அவருடைய பாடுகளில் பங்கேற்றது போல, நாங்களும் எங்கள் அயலார் அனுபவிக்கும் துன்பங்களில் அவர்களுடன் இருந்து துணைபுரியும் ஆற்றலைப் பெற உம் திருமைந்தனிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பழிகளைப் சுமத்திப் பரிகசித்தார் - உயிர்
பறித்திட எண்ணித் தீர்பளித்தார்
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக


முதலாம் தலம்

முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதரைச் சாவுக்குத் தீர்வையிடுகிறார்கள்:

விவிலியச் சிந்தனை(மத்தேயு 27:1-2, 22-24, 26)
பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின்மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்குஎதிராக ஆலோசனை செய்தனர். அவரைக் கட்டிஇழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர்.பிலாத்து அவர்களிடம், அப்படியானால் மெசியா என்னும்இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?” என்றுகேட்டான். அனைவரும், சிலுவையில் அறையும்” என்றுபதிலளித்தனர். அதற்கு அவன், இவன் செய்த குற்றம்என்ன?” என்று கேட்டான். அவர்களோ, சிலுவையில்அறையும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள்.பிலாத்து தன் முயற்சியால் பயனேதும் ஏற்படவில்லை,மாறாகக் கலகமே உருவாகிறது என்று கண்டு,கூட்டத்தினரின் முன்னிலையில் தண்ணீரை எடுத்து,இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை.நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறித் தன்கைகளைக் கழுவினான். அப்போது அவன் பரபாவைஅவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான்இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில்அறையுமாறு ஒப்புவித்தான்.

செபம்: (எல்லோரும்)
எங்கள் அன்பு இயேசுவே! யாதொரு குற்றமோ பாவமோஅறியாத உம்மைச் சாவுக்குத் தீர்ப்பிட்டார்கள். வாழ்வும்,வழியும், உண்மையுமான உம்மையே நாங்கள்பின்பற்றவும், தவறான தீர்ப்பு வழங்காதிருக்கவும்எங்களுக்கு அருள்தாரும். ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்.

தாளாச் சிலுவையைச் சுமக்க வைத்தார் -உம்மை
மாளாத் துயரால் துடிக்க வைத்தார்
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக


இரண்டாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதரின் தோள்மேல் சிலுவையைச் சுமத்துகிறார்கள்.

விவிலியச் சிந்தனை(மத்தேயு 27:27-31)
ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன்மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்தபடைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்றுகூட்டினர் அவருடைய ஆடைகளை உரிந்து,கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்குஅணிவித்தனர். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரதுதலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒருகோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு,யூதரின் அரசரே, வாழ்க!” என்று சொல்லி ஏளனம்செய்தனர் அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்துஅவருடைய தலையில் அடித்தனர் அவரை ஏளனம்செய்தபின், அவர்மேல் இருந்த தளர் அங்கியைக்கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்துஅவரைச் சிலுவையில் அறைவதற்காக இழுத்துச்சென்றனர்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! உம்மேல் சுமத்தப்பட்ட சிலுவைஎங்கள் பாவங்களின் விளைவு என்பதைஉணர்கின்றோம். யார்மீதும் அநியாயமாகப்பழிசுமத்தாமல் இருக்கவும், எங்கள் வாழ்வில் வருகின்றதுன்பங்கள் என்னும் சிலுவையைப் பொறுமையோடுஏற்றுக்கொள்ளவும் எங்களுக்கு அருள்தாரும். ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.

அ. - ஆமென்

விழுந்தீர் சிலுவைப் பளுவோடு - மீண்டும்
எழுந்தீர் துயர்களின் நினைவோடு
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக


மூன்றாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் முதல் முறை தரையில் குப்புற விழுகிறார்.

விவிலியச் சிந்தனை(புலம்பல் 1:14, 16-17)
என் குற்றங்கள் என்னும் நுகம் அவர் கையால்பூட்டப்பட்டுள்ளது; அவை பிணைக்கப்பட்டு, என்கழுத்தைச் சுற்றிக் கொண்டன் அவர் என்வலிமையைக் குன்றச் செய்தார் நான் எழ இயலாதவாறுஎன் தலைவர் என்னை அவர்கள் கையில் ஒப்புவித்தார்.இவற்றின் பொருட்டு நான் புலம்புகின்றேன் என் இருகண்களும் கண்ணீரைப் பொழிகின்றன் என் உயிரைக்காத்து ஆறுதல் அளிப்பவர் எனக்கு வெகு தொலையில்உள்ளார் பகைவன் வெற்றி கொண்டதால் என்பிள்ளைகள் பாழாய்ப் போயினர். சீயோன் தன் கைகளைஉயர்த்துகின்றாள் அவளைத் தேற்றுவார் யாருமில்லைசூழந்து வாழ்வோர் யாக்கோபுக்கு எதிரிகளாயிருக்குமாறுஆண்டவர் கட்டளையிட்டார் எருசலேம் அவர்களிடையேதீட்டுப்பொருள் ஆயிற்று.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! சிலுவையின் பாரத்தால் நீர் முகம்குப்புறக் கீழே விழுந்தீர். துன்ப துயரங்களின் சுமையால்வாடுகின்ற மக்களைக் கனிவோடு கண்ணோக்கிடஎங்களுக்கு அருள்வீராக. ஆமென்

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

தாங்கிட வொண்ணாத் துயருற்றே - உம்மைத்
தாங்கிய அன்னைத் துயருற்றாள்
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக


நான்காம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் தமது புனித தாயாரைச் சந்திக்கிறார்.

விவிலியச் சிந்தனை(புலம்பல் 2:13, 15, 18)
மகளே! எருசலேம்! உன் சார்பாக நான் என்னசொல்வேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? மகள்சீயோனே! கன்னிப் பெண்ணே! யாருக்கு உன்னைஇணையாக்கித் தேற்றுவேன் உன்னை? உன் காயம்கடலைப்போல் விரிந்துள்ளதே! உன்னைக் குணமாக்கயாரால் முடியும்? அவ்வழியாய்க் கடந்து செல்வோர்உன்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தனர்! மகள்எருசலேமை நோக்கித் தலையை ஆட்டிச்சீழ்க்கையடித்தனர்! அழகின் நிறைவும் மண்ணுலகின்மகிழ்ச்சியுமாக இருந்த மாநகர் இதுதானா?” என்றனர்.அவர்களின் இதயம் என் தலைவனை நோக்கிக்கூக்குரலிடுகின்றது; மகள் சீயோனின் மதிலே! இரவும்பகலும் வெள்ளமெனக் கண்ணீர் பொழி! உனக்கு ஒய்வுவேண்டாம்! கண்ணீர் விடாமல் நீ இருக்க வேண்டாம்!

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! உம்மை ஈன்றெடுத்த அன்னை மரியாஉம் துன்பங்களைக் கண்டு மனமுடைந்தார். அந்தஅன்னையின் அரவணைப்பில் நாங்கள் என்றும்மகிழ்வுகொள்ள அருள்வீராக. ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

மறுத்திட முடியா நிலையாலே - சீமோன்
வருத்தினார் தன்னை உம்மோடு
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக


ஐந்தாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் சிலுவையைச் சுமப்பதற்கு சீமோன் உதவி செய்கிறார்.

விவிலியச் சிந்தனை(லூக்கா 23:26)
அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது சிரேன் ஊரைச்சேர்ந்த சீமோன்என்பவர் வயல்வெளியிலிருந்து வந்துகொண்டிருந்தார்.அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின்சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்துகொண்டுபோகச் செய்தார்கள்.(மத்தேயு 16:24)பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, என்னைப் பின்பற்றவிரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத்தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” என்றார்.(மத்தேயு 11:29-30)இயேசு, நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டுஎன்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள்உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என்நுகம் அழுத்தாது என் சுமை எளிதாயுள்ளது” என்றார்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! கடின சிலுவையை நீர் சுமந்துசெல்லசீமோன் என்பவர் துணைசெய்தார். எங்கள் சகோதரர்சகோதரிகளின் துன்பங்களைப் பகிர்ந்துகொண்டு,அவர்களின் சிலுவைப் பாரத்தைக் குறைத்திடஎங்களுக்குத் துணைசெய்வீராக. ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

நிலையாய்ப் பதிந்தது உம் வதனம் - அன்பின்
விலையாய் மாதின் சிறு துணியில்
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக


ஆறாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதருடைய திருமுகத்தை ஒரு பெண் துடைக்கிறார்.

விவிலியச் சிந்தனை(மத்தேயு 25:37-40)
அதற்கு நேர்மையாளர்கள் ஆண்டவரே, எப்பொழுதுஉம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம்,அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத்தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக்கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடைஇல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்?எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக்கண்டு உம்மைத்தேடி வந்தோம்?” என்று கேட்பார்கள்.அதற்கு அரசர், மிகச் சிறியோராகிய என் சகோதரர்சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம்எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச்சொல்லுகிறேன்” எனப் பதிலளிப்பார்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! வியர்வையாலும் இரத்தத்தாலும்கறைபட்ட உம் திருமுகத்தை ஒரு பெண்மணிஅன்போடு துடைத்து உமக்கு ஆறுதலளித்தார். எங்கள்வீட்டிலும் நாட்டிலும் உலகிலும் கவலையால் வாடும்அனைவரின் துன்பங்களையும் துடைத்திட எங்களுக்குஅருள்வீராக. ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததினால் - அந்தோ
சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும்
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக


ஏழாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் இரண்டாம் முறை தரையில் குப்புற விழுகிறார்.

விவிலியச் சிந்தனை(எசாயா 53:3-6)
அவர் இகழப்பட்டார் மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்வேதனையுற்ற மனிதராய் இருந்தார் நோயுற்று நலிந்தார்காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில்அவர் இருந்தார் அவர் இழிவுபடுத்தப்பட்டார் அவரைநாம் மதிக்கவில்லை. மெய்யாகவே அவர் நம்பிணிகளைத் தாங்கிக்கொண்டார் நம் துன்பங்களைச்சுமந்து கொண்டார் நாமோ அவர் கடவுளால்வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும்சிறுமைப்படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம். அவரோநம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார் நமக்குநிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறிஅலைந்தோம் நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்ஆண்டவரோ நம்அனைவரின் தீச்செயல்களையும்அவர்மேல் சுமத்தினார்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! சிலுவையின் பாரம் உம் தோள்களைஅழுத்தியதால் நீர் மீண்டும் ஒருமுறை கீழே விழுந்தீர்.ஆனால் மன உறுதியோடு மீண்டும் பயணத்தைத்தொடர்ந்தீர். நாங்களும் ஏமாற்றத்தையும் தோல்வியையும்கண்டு துவழ்ந்துவிடாமல் துணிந்து எழுந்து, உம்மேல்நம்பிக்கைவைத்து முன்னேறிச் சென்றிட அருள்வீராக.ஆமென்!

. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்.

விழிநீர் பெருக்கிய மகளிருக்கு - அன்பு
மொழி நீர் நல்கி வழி தொடர்ந்தீர்
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக


எட்டாhம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் யூதப் பெண்களுக்கு ஆறுதல் சொல்லுகிறார்.

விவிலியச் சிந்தனை(லூக்கா 23:27-28)
பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப்புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னேசென்றார்கள். இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி,எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும்அழுங்கள்” என்றார்.(திருத்தூதர் பணிகள் 21:13)அதற்குப் பவுல் மறுமொழியாக, நீங்கள் அழுது ஏன்என் உள்ளத்தை உடைக்கிறீர்கள்? நான் ஆண்டவர்இயேசுவின் பெயருக்காக எருசலேமில் கட்டப்படுவதற்குமட்டுமல்ல, சாவதற்கும் தயார்” என்றார்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! உமக்கு நேர்ந்த சொல்லற்கரியதுன்பத்தையும் பாராமல் நீர் பிறருக்கு ஆறுதல் கூறினீர்.தன்னலம் பாராது பிறர்நலம் நோக்கவும்,துன்புறுவோருக்கு ஆறுதல் கூறவும் எங்களுக்குநல்மனத்தைத் தந்து, தூய வழியில் நாங்கள் நடந்திடஅருள்வீராக. ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்
மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் - கால்
ஊன்றி நடந்திட மெய் நொந்தீர்
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக


ஒன்பதாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் மூன்றாம் முறை தரையில் குப்புற விழுகிறார்.

விவிலியச் சிந்தனை(திருப்பாடல்கள் 22:1; 40:11-13)
இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக்கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?...ஆண்டவரே, உமது பேரிரக்கத்தை எனக்குக் காட்டமறுக்காதேயும் உமது பேரன்பும் உண்மையும்தொடர்ந்து என்னைப் பாதுகாப்பனவாக! ஏனெனில்எண்ணிறந்த தீமைகள் எனைச் சூழ்ந்து கொண்டன்என் குற்றங்கள் என்மீது கவிந்து என் பார்வையைமறைத்துக்கொண்டன. அவை என் தலைமுடிகளைவிடமிகுதியானவை; என் உள்ளம் தளர்ந்து என்னைக்கைவிட்டது. ஆண்டவரே, என்னை விடுவிக்கமனமிசைந்தருளும் ஆண்டவரே, எனக்கு உதவி செய்யவிரைந்து வாரும்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! மீண்டும் மீண்டும் கீழே விழுந்ததால்உம் உடல் எல்லாம் இரத்தமயமாயிற்று. எங்கள்பாவங்களுக்காக நீர் நொறுக்கப்பட்டீர். எங்கள்சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் நாங்கள்தூய்மையோடு வாழவும், பாவத்தை வெறுத்து, உம்அன்பில் எந்நாளும் வளரவும் எங்களுக்கு அருள்வீராக.ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

உடைகள் களைந்திட உமை தந்தீர் - ரத்த
மடைகள் திறந்திட மெய் நொந்தீர்
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக


பத்தாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதருடைய ஆடைகளைக் களைகிறார்கள்.

விவிலியச் சிந்தனை(யோவான் 19:23-24)
இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின் படைவீரர்அவருடைய மேலுடைகளை நான்கு பாகமாகப் பிரித்துஆளுக்கு ஒரு பாகம் எடுத்துக் கொண்டார்கள்.அங்கியையும் அவர்களே எடுத்துக்கொண்டனர். அந்தஅங்கி மேலிருந்து கீழ்வரை தையலே இல்லாமல்நெய்யப்பட்டிருந்தது. எனவே அவர்கள் ஒருவரை ஒருவர்நோக்கி, அதைக் கிழிக்க வேண்டாம். அது யாருக்கும்கிடைக்கும் என்று பார்க்கச் சீட்டுக் குலுக்கிப்போடுவோம்” என்றார்கள். என் ஆடைகளைத்தங்களுக்குள் பகிர்ந்து என் உடைமீது சீட்டுப்போட்டார்கள்” என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறுநிறைவேறியது.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! உம் உடைகளைக் களைந்தவர்கள்உம்மை அவமானத்திற்கு உள்ளாக்கினார்கள். வறுமை,அரசியல் அடக்குமுறை, அதிகாரப்பாணி போன்றஅவலங்களால் மனித உரிமையும் மாண்பும் உரியப்பட்டுநிர்வாணமாக்கப்படுகின்ற எம் சகோதரர் சகோதரியரைநினைத்துப் பார்க்கின்றோம். உம் உடன்பிறப்புகளாகியஅவர்களது மாண்பினைக் காத்துப் போற்றிட எங்களுக்குஅருள்வீராக. ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

பொங்கிய உதிரம் வடிந்திடவே - உம்மைத்
தொங்கிடச் செய்தார் சிலுவையிலே
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக


பதினோராம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதரை சிலுவையில் அறைகிறார்கள்.

விவிலியச் சிந்தனை(யோவான் 19:16-19,25)
அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையுமாறுஅவர்களிடம் ஒப்புவித்தான். அவர்கள் இயேசுவைத் தம்பொறுப்பில் ஏற்றுக்கொண்டார்கள். இயேசு சிலுவையைத்தாமே சுமந்துகொண்டு மண்டை ஒட்டு இடம்”என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில்கொல்கொதா” என்பது பெயர். அங்கே அவர்கள்இயேசுவையும் அவரோடு வேறு இருவரையும்சிலுவைகளில் அறைந்தார்கள் அவ்விருவரையும் இருபக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாக அறைந்தார்கள்.பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச்சிலுவையின் மீது வைத்தான். அதில் நாசரேத்து இயேசுயூதர்களின் அரசன்” என்று எழுதியிருந்தது. சிலுவைஅருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும்குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலாமரியாவும் நின்றுகொண்டிருந்தனர்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! சிலுவையில் நீர் அறையப்பட்டபோதுஉம் கைகளையும் கால்களையும் ஆணிகளால்துளைத்தார்கள். உம் திருக்காயங்களால் நீர் எங்கள்காயங்களைக் குணமாக்கினீர். நீர் சிந்திய இரத்தத்தால்நாங்கள் கழுவப்பட்டுள்ளோம். அவமானச் சின்னமாகியசிலுவையை நீர் மீட்பின் கருவியாக்கியதுபோலநாங்களும் எங்கள் துன்பதுயரங்களை உம்சிலுவையோடு இணைத்து உம் மீட்பின் பலன்களைஇடைவிடாது துய்த்து அனுபவித்திட எங்களுக்குஅருள்வீராக. ஆமென்!

. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்.

இன்னுயிர் அகன்றது உமைவிட்டு - பூமி
இருளினில் ஆழ்ந்தது ஒளி கெட்டு
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக


பன்னிரண்டாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் சிலுவையில் இறக்கிறார்.

விவிலியச் சிந்தனை(மத்தேயு 27:45-46, 50, 54)
நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்றுமணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று. மூன்றுமணியளவில் இயேசு, ஏலி, ஏலி லெமா சபக்தானி!”அதாவது, என் இறைவா, என் இறைவா, ஏன்என்னைக் கைவிட்டீர்!” என்று உரத்த குரலில்கத்தினார். இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்திஉயிர்விட்டார். நூற்றுவர் தலைவரும் அவரோடுஇயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும்நிகழ்ந்த யாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, இவர்உண்மையாகவே இறைமகன்” என்றார்கள்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! வானத்திற்கும் பூமிக்கும் இடையே நீர்சிலுவையில் தொங்கினீர். மனிதரைக் கடவுளின்பிள்ளைகளாக்கிட நீர் எம்மில் ஒருவராக மாறினீர்.சிலுவையில் தொங்கியபோது நீர் உரைத்த சொற்களைநினைத்துப் பார்க்கிறோம். தாகமாயிருக்கிறது” என்றுகூறிய இயேசுவே, எங்கள் ஆன்ம தாகத்தைவளர்த்தருளும். எல்லாம் நிறைவேறிற்று” என்று கூறிஉயிர்நீத்த இயேசுவே, நாங்கள் கடவுளின் திருவுளத்தைஇறுதிவரை நிலைத்துநின்று நிறைவேற்றிட அருள்தாரும்.ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்
துயருற்றுத் துடித்தார் உளம் நொந்து - அன்னை
உயிரற்ற உடலினை மடி சுமந்து
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக


பதின்மூன்றாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இறந்த இயேசுவை அவர் தாயார் மடியில் வளர்த்துகிறார்கள்.

விலியச் சிந்தனை(யோவான் 19:38-40)
அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர்இயேசுவின் சீடர்களுள் ஒருவர் யூதருக்கு அஞ்சியதால்தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக்காட்டிக்கொள்ளாதவர். அவர் இயேசுவின் உடலைஎடுத்துக் கொண்டுபோகப் பிலாத்திடம் அனுமதிகேட்டார். பிலாத்தும் அனுமதி கொடுத்தான். யோசேப்புவந்து இயேசுவின் சடலத்தை எடுத்துக்கொண்டுபோனார். முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்தநிக்கதேம் என்பவரும் அங்கு வந்து சேர்ந்தார். அவர்வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்துஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார்.அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து யூத அடக்கமுறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால்சுற்றிக் கட்டினார்கள்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! உயிரற்ற உம் சடலத்தை உம்அன்னை மரியா தம் மடியில் கிடத்தி அழுது புலம்பினார்.அவரை எங்களுக்கு அன்னையாக அளித்ததற்காகஉமக்கு நன்றி கூறுகின்றோம். எங்கள்மேல் கொண்டஎல்லையற்ற அன்பினால் நீர் எங்களுக்காகஉயிர்துறந்தீர். உமது சாவு எங்களுக்கு வாழ்வுவழங்கிற்று. நாங்களும் உமது புகழ்ச்சிக்காகவும்பிறருடைய ஈடேற்றத்திற்காகவும் அயராது உழைத்திடஅருள்வீராக. ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு - நீர்
அடங்கிய கல்லறை உமதன்று
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக


பதினான்காம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதரைக் கல்லரையில் அடக்கம் செய்கிறார்கள்.

விவிலியச் சிந்தனை(யோவான் 19:41-42)
அவர் சிலுவையில் அறையப்பட்டிருந்த இடத்தில்ஒருதோட்டம் இருந்தது. அங்கே புதிய கல்லறை ஒன்றுஇருந்தது. அதில் அதுவரை யாரும் அடக்கம்செய்யப்படவில்லை. அன்று பாஸ்கா விழாவுக்கு ஆயத்தநாளாய் இருந்ததாலும் அக்கல்லறை அருகில்இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம்செய்தார்கள்.(லூக்கா 23:55-56)கலிலேயாவிலிருந்து அவரோடுவந்திருந்த பெண்கள் பின்தொடர்ந்து சென்றுகல்லறையைக் கண்டார்கள் அவருடைய உடலைவைத்த விதத்தைப் பார்த்து விட்டு, திரும்பிப் போய்நறுமணப் பொருள்களையும் நறுமணத் தைலத்தையும்ஆயத்தம் செய்தார்கள். கட்டளைப்படி, அவர்கள்ஒய்வுநாளில் ஒய்ந்திருந்தார்கள்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! உமது உடல் கல்லறையில்வைக்கப்பட்டாலும் மண்ணோடு மண்ணாகிஅழிந்துபோகவில்லை. நாங்களும் திருமுழுக்கின்வழியாக உம்மோடு கல்லறையில் அடக்கப்பட்டோம்.பாவத்திற்கு இறந்தோம். ஆனால், நீர் புத்துயிர் பெற்றுஎழுந்ததுபோல எங்களுக்கும் ஆன்மீக வாழ்வு அளித்து,புதிய மனிதர்களாக வாழ நீர் வழிசெய்தீர். யாம் பெற்றவாழ்வு இவ்வையகம் பெற்று மகிழ்ந்திட அருள்வீராக.ஆமென்!

-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

முன்னர் பன்முறை உரைத்தது போல் - நீர்
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தீர்
எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக


பதினைந்தாம் தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு சாவை வென்று உயிர்த்தெழுகிறார்

விவிலியச் சிந்தனை(லூக்கா 24: 1-6)
வாரத்தின் ஆதல் நாள் விடியற் காலையிலேயே தாங்கள்ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருள்களை எடுத்துக்கொண்டு அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள்கல்லறை வாயிலிலிருந்து கல் புரட்டப்பட்டிருப்பதைக்கண்டார்கள். அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கேஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை.அதைக் குறித்து அவர்கள் குழப்பமுற்றார்கள். அப்போதுதிடீரென, மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடைஅணிந்த இருவர் அவர்களுக்குத் தோன்றினர். இதனால்அப்பெண்கள் அச்சமுற்றுத் தலைகுனிந்துநின்றுகொண்டிருந்தனர். அவர்கள் அப்பெண்களைநோக்கி, உயிரோடு இருப்பவரைக் கல்லறையில்தேடுவதேன்? அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன்எழுப்பப்பட்டார்” என்றனர்.

செபம்: (எல்லோரும்)
அன்பு இயேசுவே! கடவுளின் ஆட்சியை இவ்வுலகில்கொணர நீர் வந்தீர். உமக்கு எதிராகச் செயல்பட்ட தீயசக்திகள் உமக்குக் கொலைத்தண்டனைவிதித்தபோதிலும், நீர் சாவின்மீது வெற்றிகொண்டீர்.எங்களைப் பாவத்தின் அடிமைத் தளையிலிருந்துவிடுவித்து எங்களுக்குப் புதுவாழ்வு தந்தீர்.உயிர்த்தெழுந்த ஆண்டவராகத் தந்தையின் வலம்அமர்ந்து எங்கள் அரசராக ஆட்சிசெய்கின்றீர். உலகமுடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்”என்று வாக்குறுதி அளித்துள்ளீர். உமது அன்புச் சீடராகநாங்கள் வாழவும், நீர் சென்ற வழியில் நடக்கவும்எங்களுக்கு அருள்வீராக. ஆமென்
மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்

பொறுத்தருளும் கர்த்தாவே! உமது ஜனத்தின் பாவங்களைப் பொறுத்தருளும். என்றென்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிராதேயும் சுவாமி. தயவாயிரும் சுவாமி தயவாயிரும். - மூன்று முறை

திருத்தந்தையின் கருத்துகளுக்காக ஒரு பர. அருள். திரி. மந்திரம் ஜெபிப்போம்.

திருப்பலி செபங்கள்

எல்லாம் வல்ல இறைவனிடமும்

எல்லாம் வல்ல இறைவனிடமும்
சகோதரர் சகோதரிகளே உங்களிடமும்
நான் பாவியென்று ஏற்றுக்கொள்கிறேன்.
ஏனெனில் என் சிந்தனையாலும் சொல்லாலும்
செயலாலும் கடமையில் தவறியதாலும்
பாவங்கள் பல செய்தேன்.
என் பாவமே என் பாவமே என் பெரும் பாவமே!
ஆகையால், எப்பொழுதும் கன்னியான
பரிசுத்த மரியாளையும்
வானதூதர் புனிதர் அனைவரையும்
சகோதர சகோதரிகளே உங்களையும்
நம் தேவனாகிய ஆண்டவரிடம்
எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.


உன்னதங்களிலே கடவுளுக்கு

உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக!
பூவுலகில் நன்மனத்தோர்க்கு அமைதியும் ஆகுக!
உம்மைப் புகழ்கின்றோம், உம்மை வாழ்த்துகின்றோம்,
உம்மை ஆராதிக்கின்றோம், உம்மை மகிமைப்படுத்துகின்றோம்.
உமது மேலான மாட்சிமையின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம்.

ஆண்டவராகிய சர்வேசுரா, வானுலக அரசரே,
எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரா!
ஏக சுதனாய்ச் செனித்த ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே!
ஆண்டவராகிய சர்வேசுரா, சர்வேசுரனின் செம்மறியே, பிதாவின் சுதனே,
உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்.

பிதாவின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே பரிசுத்தர்;
நீர் ஒருவரே ஆண்டவர், நீர் ஒருவரே உன்னதர்; பரிசுத்த ஆவியோடு
பிதாவாகிய சர்வேசுரனின் மாட்சிமையில் இருப்பவர் நீரே.
ஆமென்.


வானமும் பூமியும்

ஒரே கடவுளை விசுவசிக்கின்றேன்.
வானமும் பூமியும் காண்பவை காணாதவை
யாவும் படைத்த எல்லாம் வல்ல பிதா அவரே.
சர்வேசுரனின் ஏக சுதனாய் ஜெனித்த ஒரே ஆண்டவர்
இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கின்றேன்.
இவர் யுகங்களுக்கு எல்லாம் முன்பே
பிதாவினின்று ஜெனித்தார்;
கடவுளினின்று கடவுளாக ஒளியினின்று ஒளியாக
மெய்யங் கடவுளின்று மெய்யங் கடவுளாக ஜெனித்தவர்;
இவர் ஜெனித்தவர் உண்டாக்கப்பட்டவர் அல்லர்;
பிதாவோடு ஒரே பொருளானவர்;
இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன;
மானிடரான நமக்காகவும் நம் மீட்புக்காகவும்
வானகமிருந்து இறங்கினார்;
பரிசுத்த ஆவியினால் கன்னிமரியிடம் உடல் எடுத்து மனிதன் ஆனார்.
மேலும் நமக்காகப் போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் சிலுவையில் அறையுண்டு
பாடுபட்டு அடக்கம் செய்யப்பட்டார்.
வேதாகமத்தின் படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
வானகத்திற்கு எழுந்தருளி
பிதாவின் வலப் பக்கம் வீற்றிருக்கின்றார்.
ஜீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க
மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கின்றார்.
அவரது அரசுக்கு முடிவு இராது.
பிதாவினின்றும் சுதனினின்றும் புறப்படும்
ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான
பரிசுத்த ஆவியை விசுவசிக்கின்றேன்.
இவர் பிதாவோடும் சுதனோடும் ஒன்றாக
ஆராதனையும் மகிமையும் பெறுகின்றார்.
தீர்க்கத் தரிசிகளின் வாயிலாக பேசியவர் இவரே.
ஏக பரிசுத்த கத்தோலிக்க அப்போஸ்தலிக்க
திருச்சபையை விசுவசிக்கின்றேன்.
பாவமன்னிப்புக்கான ஒரே ஞானஸ்நானத்தையும்
ஏற்றுக்கொள்கின்றேன்.
மரித்தோர் உத்தானத்தையும்
வரவிருக்கும் மறு உலக வாழ்வையும்
எதிர்பார்க்கின்றேன். - ஆமென்.


காணிக்கைப் பாடலுக்குப் பின்

குரு
சகோதர சகோதரிகளே, நாம் அனைவரும் ஒப்புக்கொடுக்கும் இத்திருப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி செபியுங்கள்.

இறை மக்கள்
ஆண்டவர் தமது திருப்பெயரின் புகழ்ச்சிக்காகவும் மகிமைக்காகவும் நமது நன்மைக்காகவும் தமது பரிசுத்த திருச்சபை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையினின்று இப்பலியை ஏற்றுக் கொள்வாராக.


தூயவர்

தூயவர் தூயவர் தூயவர்
மூவுலகிறைவனாம் ஆண்டவர்.
வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஓசான்னா!
ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசி பெற்றவரே;
உன்னதங்களிலே ஓசான்னா!
விசுவாசத்தின் மறைபொருள்


இது விசுவாசத்தின் மறைபொருள்.
ஆண்டவரே, தேவரீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பையும் எடுத்துரைக்கின்றோம்.


கிறிஸ்து கற்பித்த செபம்

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக;
உம்முடைய இராச்சியம் வருக;
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல
பூலோகத்திலும் செய்யப்படுவதாக.

எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.
எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களை சோதனையில் விழவிடாதேயும்,
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
ஆமென்.


உலகின் பாவம் போக்கும்

உலகின் பாவம் போக்கும்
இறைவனின் செம்மறியே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே,
எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.


ஆண்டவரே தேவரீர் என்னிடம் எழுந்தருள

ஆண்டவரே தேவரீர் என்னிடம் எழுந்தருள நான் தகுதியற்றவன்(ள்).
ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும்; என் ஆன்மா குணமடையும்.

திருப்பலிப் பாடல்கள்

தீர்த்தம் தெளித்தல் (பொதுக்காலம்)

ஆண்டவரே ஈசோப் புல்லினால் என்மேல் தெளிப்பீர்;
நானும் தூய்மை ஆவேன்.
நீரே என்னைக் கழுவ நானும்
உறைபனி தனிலும் வெண்மையாவேன்.

இறைவா உமது இரக்கப் பெருக்கத்திருக்கேற்ப
என்மேல் இரக்கம் கொள்ளுவீர்.

பிதாவும் சுதனும் தூய ஆவியும்
துதியும் புகழும் ஒன்றாய்ப் பெறுக.
ஆதியில் இருந்தது போல்
இன்றும் என்றும் நித்தியமாகவும் - ஆமென்.

தீர்த்தம் தெளித்தல் (பாஸ்குகாலம்)

தேவாலய வலப்புறமிருந்து
தண்ணீர் புறப்படக் கண்டேன் - அல்லேலூயா.

அந்தத் தண்ணீர் யாரிடம் வந்ததோ
அவர்கள் யாவருமே
ஈடேற்றம் பெற்றுக் கூறுவர்:
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா.

ஆண்டவரைப் போற்றுங்கள்
ஏனெனில் அவர் நல்லவர்;
அவர் தம் இரக்கம் என்றென்றும் உள்ளதே;
பிதாவும் சுதனும் தூய ஆவியும்
துதியும் புகழும் ஒன்றாய் பெறுக,

ஆதியில் இருந்ததுபோல்
இன்றும் என்றும் நித்தியமாகவும் - ஆமென்.


ஆண்டவரே இரக்கமாயிரும்

ஆண்டவரே இரக்கமாயிரும்!
கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
ஆண்டவரே இரக்கமாயிரும்!


உன்னதங்களிலே இறைவனுக்கு

உன்னதங்களிலே இறைவனுக்கு
மாட்சிமை உண்டாகுக!
உலகினிலே நல் மனத்தவர்க்கு
அமைதியும் உண்டாகுக!
புகழ்கின்றோம் யாம் உம்மையே
வாழ்த்துகின்றோம் இறைவனே!
உமக்கு ஆராதனை புரிந்து உம்மை
மகிமைப் படுத்துகின்றோம் யாம்.

உமது மேலாம் மாட்சிமைக்காக
உமக்கு நன்றி நவில்கின்றோம்.
ஆண்டவராம் எம் இறைவனே
இணையில்லாத விண்ணரசே!

ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும்
தேவ தந்தை இறைவனே!
ஏக மகனாக ஜெனித்த ஆண்டவர்
இயேசு கிறிஸ்து இறைவனே!

ஆண்டவராம் எம் இறைவனே!
இறைவனின் திருச் செம்மறியே!
தந்தையினின்று நித்தியமாக
ஜெனித்த இறைவன் மகனே நீர்!

உலகின் பாவம் போக்குபவரே,
நீர் எம்மீது இரங்குவீர்!
உலகின் பாவம் போக்குபவரே,
எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்!

தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே,
நீர் எம்மீது இரங்குவீர்!
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே
நீர் ஒருவரே தூயவர்!
நீர் ஒருவரே ஆண்டவர்!
நீர் ஒருவரே உன்னதர்!
பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின்
மாட்சியில் உள்ளவர் நீரே. - ஆமென்!


அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா!
மெல்லிசைக் கருவிகள் மீட்டிடுவோம்
மேளமும் தாளமும் முழங்கிடுவோம்
நல்லவர் ஆண்டவர் என்றுரைப்போம்
நாளுமே அவரைப் போற்றிடுவோம்.


வானமும் பூமியும்

வானமும் பூமியும் படைத்தவராம்
கடவுள் ஒருவர் இருக்கின்றார்;
தந்தை சுதன் தூய ஆவியுமாய்
நம்மில் உறவுடன் வாழ்கின்றார்!

பரிசுத்த ஆவியின் வல்லமையால்
திருமகன் மரியிடம் மனுவானார்;
மனிதரைப் புனிதராய் ஆக்கிடவே
புனிதராம் கடவுள் மனிதரானார்!

பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார்,
கல்லறை ஒன்றில் அடக்கப்பட்டார்;
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்,
மரணத்தின் மீது வெற்றி கொண்டார்!

பரலோகம் வாழும் தந்தையிடம்
அரியணை கொண்டு இருக்கின்றார்;
உலகம் முடியும் காலத்திலே
நடுவராய்த் திரும்பவும் வந்திடுவார்!

பரிசுத்த ஆவியை நம்புகிறோம்,
பாரினில் அவர் துணை வேண்டுகிறாம்;
பாவ மன்னிப்பில் தூய்மை பெற்று
பரிகார வாழ்வில் இணைந்திடுவோம்!

திருச்சபை உரைப்பதை நம்புகிறோம்;
புனிதர்கள் உறவை நம்புகிறோம்;
சரீரத்தின் உயிர்ப்பை மறுவாழ்வை
விசுவாசப் பொருளாய் நம்புகிறோம்!

தூய நல் ஆவியாம் இறைவனையும்
தூயவராக்கும் ஒப்புரவையும்
புனிதராம் இயேசுவின் ஆட்சியையும்
புனித நல் வாழ்விற்காய் ஏற்கின்றோம்.
- ஆமென்!


தூயவர்

தூயவர், தூயவர், தூயவர்,
மூவுலகிறைவனாம் ஆண்டவர்!
வானமும் வையமும் யாவும் நும்
மாட்சிமையால் நிறைந்துள்ளன!
உன்னதங்களிலே ஓசான்னா! (2)

ஆண்டவர் திருப்பெயரால்
வருபவர் ஆசீர் பெற்றவரே!
உன்னதங்களிலே ஓசான்னா! (2)


விசுவாசத்தின் மறைபொருள்

குரு
இது விசுவாசத்தின் மறைபொருள்

இறை மக்கள்
எமக்காக மரித்தீர்
எமக்காக உயிர்த்தீர்
மீண்டும் வருவீர்
உமக்கே ஆராதனை உமக்கே
ஆராதனை.
இறை மக்கள் (மறு வடிவம்)

கிறிஸ்து மரித்தார்
கிறிஸ்து உயிர்த்தார்
கிறிஸ்து மீண்டும் வருவார்.


உலகின் பாவம் போக்கும்

உலகின் பாவம் போக்கும்
இறைவனின் திருச்செம்மறியே,
எம்மேல் இரக்கம் வையும்.

உலகின் பாவம் போக்கும்
இறைவனின் திருச்செம்மறியே,
எம்மேல் இரக்கம் வையும்.

உலகின் பாவம் போக்கும்
இறைவனின் திருச்செம்மறியே,
எமக்கு அமைதி அருளும்.

புனித தேவமாதா பிராத்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதானாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
தூய ஆவியாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

புனித மரியோயே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
சர்வேசுரனுடைய புனித மாதாவே -எங்களுக்கா ...
கன்னியாஸ்திரீகளின் உத்தம கன்னிகையே ...
மகா அன்பிற்கு பாத்திரமாயிருக்கிற மாதாவே...
கிறில்துவினுடைய மாதாவே...
தேவ வரப்பிரசாதத்தின் மாதாவே...
மகா பரிசுத்த மாதாவே...
அத்தியந்த விரத்தியாயிருக்கிற மாதாவே..
பழுதற்ற கன்னிகையாயிருக்கிற மாதாவே...
கன்னி சுத்தங்கெடாத மாதாவே...
மகா அன்புக்குப் பாத்திரமாயிருக்கற மாதாவே...
ஆச்சரியத்துக்குரிய மாதாவே...
நல்ல ஆலோசனை மாதாவே,,,
சிருஷ்டிகருடைய மாதாவே...
இரட்சகருடைய மாதாவே...
மகா புத்தியுடைத்தான கன்னிகையே...
மகா வணக்கத்துக்குரிய கன்னிகையே...
பிரகாசமாய் ஸ்துதிக்கப்பட யோகியமாயிருக்கிற கன்னிகையே...
சக்தியுடைத்தவளாயிருக்கிற கன்னிகையே...
தயையுள்ள கன்னிகையே...
விசுவாசியாயிருக்கிற கன்னிகையே....
தருமத்தின் கண்ணாடியே...
ஞானத்துக்கு இருப்பிடமே...
எங்கள் சந்தோஷத்தின் காரணமே...
தேவ இரகசியத்தைக் கொண்டிருக்கிற ரோஜா புஷ்பமே...
ஞான பாத்திரமே...
மகிமைக்குரிய பாத்திரமே...
அத்தியந்த பக்தியுடைத்தான பாத்திரமே...
தாவீது இராஜாவுடைய உப்பரிகையே...
தந்த மயமாயிருக்கிர உப்பரிகையே...
சொர்ண மயமாயிருக்கிற ஆலயமே...
வாக்குத்தத்தத்தின் பெட்டகமே...
பரலோகத்தினுடைய வாசலே...
விடியக்காலத்தின் நட்சத்திரமே...
வியாதிக்காரருக்கு ஆரோக்கியமே...
பாவிகளுக்கு அடைக்கலமே...
கஸ்திப்படுகிறவர்களுக்கு தேற்றரவே...
கிறிஸ்தவர்களுடைய சகாயமே...
சம்மனசுக்களுடைய இராக்கினியே...
பிதா பிதாக்களுடைய இராக்கினியே...
இறைவாக்கினர்களுடைய இராக்கினியே...
அப்போஸ்தலர்களுடைய இராக்கினியே...
மறைசாட்சிகளுடைய இராக்கினியே...
துதியர்களுடைய இராக்கினியே...
கன்னியர்களுடைய இராக்கினியே...
அனைத்துப் புனிதர்களுடைய இராக்கினியே...
ஜென்ம பாவமின்றி உற்பவித்த இராக்கினியே...
பரலேகத்துக்கு ஆரோபணமான இராக்கினியே...
திருச் செபமாலையின் இராக்கினியே...
சமாதானத்தின் இராக்கினியே...

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மரியே
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மரியே
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மரியே
எங்கள் மேல் இரக்கமாயிரும்

சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே ! இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்குப் பாராமுகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சமுடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே ! சகல ஆபத்துக்களிலேயும் நின்று எங்களைத் தற்காத்துக் கொள்ளும். -ஆமென்.
இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி, சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஜெபிப்போமாக :
இறைவா! முழுமனதோடே தெண்டனாக விழுந்துகிடக்கிற இந்த குடும்பத்தைப் பார்த்து எப்பொழுதும் பரிசுத்த கன்னியான மரியாளுடைய வேண்டுதலினாலே, சகல சத்துருக்களின் சற்பனையிலே நின்று பிரசன்னராய்த் தயை செய்து இரட்சியும். இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவரான இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்.

பரிசுத்த ஆவியை நோக்கி

தூய ஆவியே, எழுந்தருள்வீர்,
வானின்றுமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீ தனுப்பிடுவீர்.

எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்,
இருதய ஒளியே வந்தருள்வீர்.

உன்னத ஆறுத லானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தன்மையும் தருபவரே,

உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர்நிழலே,
அழுகையில் ஆறுத லானவரே,

உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப் போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.

உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
நல்லது அவனில் ஏதுமில்லை.

மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வரட்சி யுற்றதை நனைத்திடுவீர்.
காயப் பட்டதை ஆற்றிடுவீர்.

வணங்கா திருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
தவறிப் போனதை ஆண்டருள்வீர்.

இறைவா, உம்மை விசுவசித்து,
உம்மை நம்பும் அடியார்க்குக்
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.

புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்.
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்.
அழிவிலா இன்பம் அருள்வீரே.

ஆமென்.

பரிசுத்த ஆவியின் செபம் புதிய மொழிபெயர்ப்பு

தூய ஆவியே எழுந்தருள்வீர்,
வானின்று உமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீது அனுப்பிடுவீர்.

எளியவர் தந்தாய் வந்தருள்வீர்,
நன்கொடை வல்லலே வந்தருள்வீர்,
இதய ஒளியே வந்தருள்வீர்.

உன்னத ஆறுத லானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தன்மையும் தருபவரே.

உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வேம்மைத் தணிக்கும் குளிர்நிழலே,
அழுகையில் ஆறுத லானவரே.

உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப் போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.

உமதருள் ஆற்றல் இல்லாமல்,
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை
நல்லது அவனில் ஏதுமில்லை.

மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வரட்சி யுற்றதை நனைத்திடுவீர்.
காயப் பட்டதை ஆற்றிடுவீர்.

வணங்கா திருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதை குளிர் போக்கிடுவீர்,
தவறிப் போனதை ஆண்டருள்வீர்.

இறைiவா உம்மை விசுவசித்து ,
உம்மை நம்பும் அடியார்க்கு,
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.

புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்,
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்,
அழிவிலா இன்பம் அருள்வீரே.

ஆமென்.

கிருபை தயாபத்து மந்திரம்

கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதன்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப ரசமுள்ள கன்னிமரியாயே!

- இயேசு கிறிஸ்து நாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக
- சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
-ஆமென்.

ஜெபிப்போமாக
சர்வ சக்தியுடையவருமாய் நித்தியருமாய் இருக்கிற இறைவா! முத்திபேறுபெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆத்துமமும் சரீரம் தூய ஆவியின் அனுக்கரகத்தினாலே தேவரீருடைய திருமகனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கெனவே நியமித்தருளினீரே. அந்த திவ்விய தாயை நினைத்து மகிழ்கிற நாங்கள் அவளுடைய இரக்கமுள்ள மன்றாடினாலே இவ்வுலகில் சகலப் பொல்லாப்புக்களிலேயும் நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும்படிக்கு கிருபை கூர்ந்தருளும். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும்.
-ஆமென்.

புனித பெர்னதத்து கன்னிமரியிடம் வேண்டின ஜெபம்

மிகவும் இரக்கமுள்ள தாயே! உமது அடைக்கலமாக ஓடிவந்து, உம்முடைய உபகார சகாயங்களை இறைஞ்சி மன்றாடிக் கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உமது திருப்பாதத்தை அண்டி வந்திருக்கிறோம். பெருமூச்n;சரிந்து அழுது பாவிகளாயிருக்கிற நாங்கள் உமது தயாபரத்தில் காத்து நிற்கின்றோம். அவதரித்த வார்த்தையின் தாயே எங்கள் மன்றாட்டைப் புறக்கனியாமல் தயாபரியாய் கேட்டுத் தந்தருளும் தாயே -ஆமென்
ஜென்பப்பாவமில்லாமல் உற்பவித்த அச்சிஸ்ட மரியாயே, பாவிகளுக்கு அடைக்கலமே, இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். -அருள்நிறைந்த (மூன்று முறை) பரிசுத்த பாப்பரசரின் கருத்துக்கள் நிறைவேறும் படியாக: ஒரு பர, ஒரு அருள், ஒரு திரி.

பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே -ஆமென்.

பேர் கொண்ட புனிதரை நோக்கி செபம்

என் பேர் கொண்டிருக்கிற புனிதரே ! ....உமது அடைக்கலத்தில் என்னை ஒப்படைத்து விடுகிறேன். எனக்கு இடப்பட்டிருக்கும் பெயருக்கு ஏற்ப சுகிர்த நடத்தை உள்ளவனாய் வாழவும் உம்மிடத்தில் சிறப்புற விளங்கிய புண்ணியங்களை நான் அனுசரிக்கவும், எனக்குத் தேவ கிருபை கிடைக்கத்தக்கதாகப் பலமாய் மனுபேசியருளும். என் வாழ்நாளில் எனக்கு நேரிடும் ஆபத்துகளில் நின்று என்னைத் தற்காத்துப் பயங்கரமான மரணவேளையில் என்னைக் கைவிடாமல் பாதுகாத்தருளும் காவலனே ! - ஆமென்.


தூய அந்தோனியார் நவநாள் செபம்

புதுமைகள் புரிய அருள்பெற்ற புனித அந்தோனியாரே எங்கள் விண்ணப்பங்களை ஏற்று, எங்களுக்கு இறைவனின் அருளைப் பெற்றுத்தாரும். குழந்தை இயேசுவைக் கையில் ஏந்தும் பேறுபெற்ற புனித அந்தோணியாரே, துன்பப்படுவோருக்கு துணைபுரியும் வள்ளலே, ஏழைகளையும் ஆதரவற்றவர்களையும் அன்புடன் அரவணைக்கும் நேசத் தந்தையே, இதோ உமது மன்றாட்டின் பயனை உணர்ந்து, அசைக்க முடியாத முழு நம்பிக்கையுடன் உமது திருத்தலத்திற்கு வந்து கூடியுள்ளோம். நீர் ஏந்தியுள்ள குழந்தை இயேசுவிடம் எங்களுக்காக பரிந்து பேசி, எம் ஆன்மாவுக்கும் உடலுக்கும் வேண்டிய வரங்களைப் பெற்றுத்தாரும். இறையருளை நிரம்பப் பெற்ற புனித அந்தோனியாரே, நாங்கள் உம் வாழ்வைப் பின்பற்றி, எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனையே அன்பு செய்யவும், அவருக்காகவே வாழவும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். நாங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் அன்பு செய்து விண்ணுலகம் வந்தடைய எங்களுக்கு இறையருளைப் பெற்றுத்தாரும்.

எங்கள் பாதுகாவலரான புனித அந்தோனியாரே, மகிமையில் விளங்கிடும் புனித லீலியே, துன்பப்படுவோரின் துயர் துடைப்பவரே, அழுவோரின் ஆறுதலே, உம்மை நாடிநிற்கும் எங்களை உம் அன்பால் அரவணைத்து ஏற்றுக்கொள்ளும். துன்ப துயரங்களிலிருந்து எங்களைக் காப்பாற்றும். வறுமையில் வாடும் எங்கள் வாழ்வை வளமாக்கும். சோதனைகளை வெல்ல வலிமையைப் பெற்றுத் தாரும். அமைதியின்றி அலையும் எங்களுக்கு ஆறுதல் தாரும். வாழ வழிஅறியாதோர்க்கு வழிகாட்டும். எங்கள் குடும்பங்களையும், வேலைகளையும், நிலங்களையும் பாதுகாத்தருளும். நீங்காத நோய்நொடிகளை உமது வேண்டுதலால் எங்களிடமிருந்து நீக்கியருளும். ஆமென்.

குழந்தை இயேசுவின் நவநாள் செபம்

அற்புதக் குழந்தை இயேசுவே, அமைதியற்ற எங்கள் உள்ளங்களின்மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும்படி தாழ்ந்து பணிந்து வணங்கி உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் இந்த வரத்தை அளித்தருளும்படி உம்மை இறைஞ்சுகிறோம். (வரத்தைக் குறிப்பிடுக…) எங்களை வாட்டி வதைக்கும் துன்ப துயரங்களையும் வேதனை சோதனைகளையும் நீக்கி உமது குழந்தைப் பருவத்தின் பெயரால் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும். அதனால் உமது ஆறுதலையும் ஆதரவையும் பெற்று தந்தையோடும் தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப் போற்றுவோமாக. ஆமென்

புனித யூதாததேயுசை நோக்கி ஜெபம்

அப்போஸ்தலரும் வேத சாட்சியுமான புனித யூதாததேயுசே! நீர் நமது ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நெருங்கிய உறவினருள் ஒருவராயிருக்கிறீர்! புண்ணியத்திலும் புதுமை வரங்களிலும் மகா கீர்த்திப் பெற்றவர்! உம்மை மன்றாடுகிறவர்களுக்காகத் தவறாமல் மனுப் பேசுகிறீர்! திக்கற்றுத் தயங்குவோருக்கு விசே:ப் பாதுகாவலர் நீர்;! நம்பிக்கை இழந்தவர்களின் நம்பிக்கை நீர்! இந்த உமது வல்லபத்தில் நம்பிக்கை வைத்து இதோ நான் உம்மை நாடி வருகிறேன். எனக்கு மிகவும் அவசரமான இந்த வேளையில் உதவிப் புரியும்படி உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன். (வேண்டியதை விசுவாசத்துடன் கேட்கவும்)

ஓ! தயாள இருதய ததேயுசே! இனிமேல் உள்ள என் வாழ்நாட்களில் உம்மை எமது பாதுகாவலாக வணங்குவேன் என்றும், எங்கள் அவசரங்களில் உதவில் செய்ய, நீர் வல்லமை மிகுந்தவரும், தீவிரமாய் பரிந்து பேசுகிறவருமாய் இருக்கிறீர்; என்ற உமது பக்தியை மக்களிடையில் பரவச் செய்வேன் என்றும் உறுதியாய் வாக்களிக்கிறேன். புனித யூதாததேயுசே, எங்களுக்காகவும் உமது உதவியை மன்றாடும் அனைவருக்காகவும் வேண்டிக்கொள்ளும் - ஆமென்.
(ஒரு. பர, அருள், திரி)

இறையழைத்தல் பெருக ஜெபம்

எல்லாம் வல்ல இறைவா இவ்வுலகில் உமது திருப்பணியை தொடர்ந்து ஆற்றி; அவரது அன்பின் சாட்சிகளாய் விளங்கவும் இருளில் இருப்போரை அருள் வாழ்வுக்கு கொண்டு வரவும் துன்படுவோரின் துயர்துடைக்கவும் இளைஞர் இளம் பெண்கள் பலர் உமது அழைப்பை பணிவன்புடன் ஏற்றுக்கொள்ள உமது அருளைத்தாரும் அறுவடைக்கு தேவையான பணி ஆட்களை அனுப்ப வேண்டுமாறு கட்டளை இட்ட உம் அன்பு திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக எம் வேண்டுதலை ஏற்றருலும்.
-ஆமென்.

ஓ மகா மதுரம் பொருந்திய நல்ல இயேசுவே

ஓ மகா மதுரம் பொருந்திய நல்ல இயேசுவே அடியேன் சாஷ்டாங்கமாய் விழுந்து என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள் என் எலுமபுகளை எண்ணினார்கள் என்று தேவரீரை பற்றி முன்னால் தாவீது தீர்க்க தரிசி உமது வாயின் வாக்கியமாக வாசித்ததை என் கண் முன்பாக கண்டு தேவரீருடைய ஐந்து திருக்காயங்களையும் மிகுந்த மன வருத்ததேடும் துக்கத்தோடும் என் உளளத்தில்; தியானிக்கும் இன்நேரத்தில் திடமான விசுவாசம் நம்பிக்கை தேவசிநேகம் ஆகியவற்றையும் என் ஆத்மத்திற்கு மேலான மனஸ்தாபத்தையும் அவற்றிற்கு மேலான பிரதிக்கினைகளையும் என் உள்ளத்;தில் பதிய செய்தருள வேண்டுமென்று எம் திருமகனாகிய இயேசுகிறிஸ்து வழியாக உம்மை பார்த்து மன்றாடுகின்றோம்.
-ஆமென்.

என் ஆண்டவரே என் முமு சுதந்தரத்தை ஏற்றுக்கொள்ளும் என் ஞானம் புத்தி சுயம் யாவற்றையும் ஏற்றுக்கொள்ளும், ஏனெனில் அவை யாவும் நீர் எமக்கு அழித்தவையே இவற்றை எல்லாம் நான் உமக்கே திருப்பி கொடுத்து விடுகிறேன். உமது திருவுலப்படி என்னை நடத்தியருளும் அப்போது நான் செல்வந்தனாய் இருப்பேன்; வேரொன்றையும் விரும்பமாட்டேன்.......
-ஆமென்.

இயேசுவின் திரு இருதயத்திற்கு குடும்பத்தை ஒப்புக் கொடுக்கும் செபம்

இயேசுவின் திரு இருதயமே! கிறிஸ்தவ குடும்பங்களிலே தேவரீர் இராசாவாக இருந்து ஆண்டருள வேண்டுமென்ற ஆசையை புனித மார்க்கரீத் மரியம்மாளுக்கு வெளிப்படுத்தினீரே! இந்தக்குடும்பத்தின் மேலே உமக்கு மாத்திரமே உள்ள முழுஅதிகாரத்தையும் அறிக்கையிட இங்கு கூடியிருக்கிறோம்.

உம்முடைய சீவிய மாதிரிகையாக நாங்களும் சீவிக்க விரும்புகிறோம். எந்தெந்தப் புண்ணியத்தினால் உலகத்துக்குச் சமாதானம் உண்டாகுமென்று தேவரீர் ஏலவே வாக்குப்பண்ணி இருக்கிறீரே! அந்தப் புண்ணியம் இந்தக் குடும்பத்தில் செழித்து வளரவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம். தேவரீர் சபித்துத் தள்ளிவிட்ட உலகப்பற்றுதல்களை எங்கள் மத்தியிலிருந்து புறக்கணித்து அகற்றிவிட ஆசிக்கிறோம். கபடற்ற விசுவாசத்தைத் தந்தருளிஇ எங்கள் புத்தியின்மேல் தேவரீர் உமது அரசாட்சியைச் செலுத்தியருளும். சிநே அக்கினியால் மூண்டெரிந்து உம்மையே முற்றாக நேசிக்கும் அன்பைத்தந்துஇ எங்கள் இருதயங்களிலே உமது அரசாட்சியைச் செலுத்தியருளும். அடிக்கடி தேவநற்கருணை உட்கொள்ளுவதனால் இந்த நேச அக்கினிச்சுவாலை வளர்க்கப்பட்டு வருவதாக.

இயேசுவின் திவ்விய இருதயமே! நாங்கள் ஒன்றுகூடும் வேளைகளில் தேவரீரே எங்கள் கூட்டங்களக்குத் தலைவராக இருந்தருளும். எங்கள் ஞான அலுவல்களையும் ஆசீர்வதித்தருளும். எங்கள் கவலைகள் எல்லாவற்றையும் நீக்கியருளும். எங்கள் சந்தோ~ங்களைப் பரிசுத்தமாக்கியருளும். எங்களது துன்ப துரிதங்களில் எங்களுக்குத் தேற்றரவாயிருந்தருளும்.

எப்போதாவது எங்களில் எவரேனும் தேவரீரைப் பிரியவீனப் படுத்தும் நிர்ப்பாக்கியத்திற்கு உள்ளாக நேரிடுமானால் மகா பரிசுத்தமுள்ள இருதயமே! நீர் மனந்திரும்பும் பாவிகள் மட்டில் நல்லவரும் இரக்கமும் உள்ளவராய் இருக்கிறீர் என்பதனை அப்படிப்பட்டவர்களுக்கு நினைவு படுத்தியருளும். நாங்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியும் நேரம் வரும்போதும் மரணமானது எங்களது மத்தியில் துக்கங்களை உண்டுபண்ணும் போதும் பிரிகிறவர்களும் பிரியாதிருப்பவர்களுமாகிய நாங்கள் எல்லோரும் உம்முடைய நித்திய ஏற்பாடுகளுக்குப் பணிவான மனதுடன் இருக்கக் கிருபை செய்தருளும். இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் எல்லோரும் பரலோகத்தில் ஒருமித்துச் சேர்ந்து தேவரீருடைய மகிமைகளையும் நீர் எங்களுக்குச் செய்த உபகாரங்களையும் நித்தியமாய்ப் புகழ்ந்து பாடும் ஒரு நாள் வருமென்ற எண்ணம் எங்கள் எல்லோருக்கும் ஆறுதல் தருவதாக.

மாசற்ற இருதய நாயகியும் மகத்துவம் பொருந்திய அதி பிதாவாகிய புனித சூசையப்பரும் இந்தக் காணிக்கையை உமக்கு ஒப்புக்கொடுத்து எங்கள் உயிருள்ளளவும் எங்களுக்கு இதனை நினைவ+ட்டுவார்களாக. எங்கள் அரசரும் தந்தையுமாகிய இயேசுவின் திரு இருதயம் துதிக்கப்படுவதாக.

(இறந்து போன உறவினர்களுக்காக வேண்டிக்கொள்வோமாக. இவ்வேளையில் சிறிது நேரம் குடும்பங்களில் இறந்து போனவர்களை மௌனமாக நினைவு கூரவும்)

இரக்கத்தின் இறைவா! எமதுகுடும்பத்தில் இறந்துபோன உறவினர்களுக்காக நாங்கள் ஒப்புக் கொடுக்கும் இவ்வேண்டுதல் இறந்துபோன உமது அடியார்கள் அனைவருடைய ஆன்மாக்களுக்கும் பயன்படுவதாக. பாவம் அனைத்திலிமிருந்து அவர்களை விடுவித்து அவர்கள் உமது மீட்பில் பங்குபெற அருள்புரிவீராக. ஏன்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அதே கிறிஸ்து இயேசு வழியாக உம்மை மன்றாடுகின்றோம் - ஆமென்.

(1பரமண்டலம் 1அருள்நிறை மரியே சொல்லவும்)

இயேசுக்கிறிஸ்துவின் திருவாக்குறுதிகளுக்கு நாங்கள் பாத்திரராய் இருக்கத்தக்கதாக.

மகா பரிசுத்த இயேசுவின் திவ்விய இருதயமே எங்கள் பேரில் இரக்கமாயிரும்

(3முறை)

மரியாயின் மாசற்ற இருதயமே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

புனித சூசையப்பரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

புனித மார்க்கரீத்து மரியம்மாளே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
(பொருத்தமான பாடல் பாடலாம். பின்னர் குருவானவர் அனைவரையும் ஆசீர்வதிப்பார்).

இடைவிடா சகாயமாதா நவநாள்

இடைவிடா சகாய அன்னையின் நவநாள்

1. வருகைப்பா (நிற்கவும்)

இடைவிடா சகாய மாதாவே உமது பிள்ளைகளுக்காக வேண்டிக் கொள்ளும், (மும்முறை)

(செபத்தின் உட்பொருள்)
இடைவிடா உதவி (முழந்தாளிடவும்)
குரு: மிகவும் பரிசுத்த மரியே, மாசில்லாக் கன்னிகையே, எங்கள் இடைவிடா சகாயமும், அடைக்கலமும் நம்பக்கையுமாக இருப்பவள் நீரே!

எல்: இன்று நாங்கள் அனைவரும் ' உம்மிடம் வருகிறோம் ' நீர் எங்களுக்கு அடைந்தருளிய வரங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம் ' இடைவிடா சகாயத் தாயே உம்மை நேசிக்கிறோம் ' எங்கள் அன்பைக் காட்ட உமக்கு எப்போதும் சேவை செய்வோம் என்றும் ' அனைவரையும் உம்மிடம் கொண்டுவர எங்களால் முடிந்தவற்றைச் செய்வோம் என்றும் வாக்களிக்கிறோம்.

குரு: இடைவிடா சகாயத்தாயே! இறைவனிடம் சக்திவாய்ந்தவளே, எங்களுக்கு இந்த வரங்களைப் பெற்றுத்தாரும்.

எல்: சோதனைகளை வெல்லும் பலத்தையும் ' இயேசுக்கிறிஸ்துவிடம் தூய்மையான அன்பையும் ' நல்ல மரணத்தையும் அடைந்து தாரும் ' உம்மோடும் உமது திருக்குமாரனோடும் ' என்றென்றும் வாழ அருள் புரியும்.

குரு : இடைவிடா சகாயத் தாயே!

எல் : எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

(குழுவினர் வேண்டுதல்)
குரு : ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவே, உமது திருத்தாயாகிய மரியன்னையின் சொல்லிற்கிணங்கி, கலிலேயாவின் கானாவ+ரில் தண்ணீரைத் திராட்சை இரசமாக்கினீரே ' எங்கள் தாயாகிய சகாய அன்னையின் மகிமையை போற்றிப் புகழ இங்கு கூடியிருப்பவர்களின் மன்றாட்டுக்களுக்கு செவி சாய்த்தருளும் எங்கள் மனமார்ந்த நன்றியை ஏற்றுக்கொண்டு, எங்கள் விண்;ணப்பங்களை கேட்டு அருள்புரிவீராக.

எல் : ஓ! இடைவிடாத சகாயத்தாயே! சக்தி வாய்ந்த உமது திருப்பெயரைக் கூவி அழைக்கிறோம் ' வாழ்வோரின் பாதுகாவலும்' மரிப்போரின் மீட்புமாயிருப்பவள் நீரே ' உமது திருப்பெயர் எங்கள் நாவில் என்றும் ஒலிப்பதாக. முக்கியமாக சோதனை நேரத்திலும் ' மரண வேளையிலும் உமது திருப்பெயரைக் கூவி அழைப்போமாக' உமது திருப்பெயர் நம்பிக்கையும் சக்தியும் வாய்ந்தது ' ஆசீர்வதிக்கப்பட்ட அன்னையே ' நாங்கள் உம்மை அழைக்கும் போதெல்லாம் எங்களுக்கு உதவி செய்தருளும் ' நாங்கள் உமது திருப்பெயரை உச்சரிப்பதோடு திருப்தியடைய மாட்டோம் ' நீரே எங்கள் இடைவிடா சகாயத்தாய் என்பதை எங்களது தினசரி வாழ்க்கையில் எடுத்துக்காட்டுவோம்.

குரு : நமது இகபரத் தேவைகளுக்காக மன்றாடுவோமாக.

எல் : ஓ! இடைவிடா சகாயத்தாயே! மிகுந்த நம்பிக்கையுடன் ' உம்முன் முழந்தாளிடுகிறோம் ' எங்கள் தினசரி வாழ்க்கைச் சிக்கல்களில் உமது உதவியைக் கெஞ்சி மன்றாடுகிறோம் ' துன்ப துயரங்கள் எங்களை வீழ்த்துகின்றன. வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளும் வறுமைப் பிணிகளும் ' எங்களைத் துன்பத்தில் ஆழ்த்துகின்றன ' எப்பக்கமும் துன்பமே நிறைந்து இருக்கின்றது. இரக்கம் நிறைந்த தாயே எங்கள் மேல் இரக்கமாயிரும் ' எங்கள் தேவைகளை நிறைவேற்றும் ' எங்கள் துன்பங்களிலிருந்து எங்களை மீட்டருளும் ' ஆனால் நாங்கள் இன்னும் அதிக காலம் துன்புறுதல் இறைவனின் சித்தமானால் ' நாங்கள் அவற்றை அன்புடனும் பொறுமையுடனும் ஏற்றுக்கொள்ள ' சகிப்புத்தன்மையை எங்களுக்கு அளித்தருளும். ஓ! இடைவிடா சகாயத்தாயே இந்த வரங்களையெல்லாம் ' எங்கள் பேறுபலன்களைக் குறித்து அல்ல ' ஆனால் உமது அன்பிலும் வல்லமையிலும் ' நம்பிக்கை வைத்து கெஞ்சி மன்றாடுகிறோம்.

விண்ணப்பங்கள்குழுவினர் மன்றாட்டு (முழந்தாளிடவும்)

குரு : எங்கள் பாப்பரசருக்கும், ஆயர்களுக்கும், குருக்களுக்கும், நாட்டுத்தலைவர்கள் , சமூகத்தலைவர்கள் அனைவருக்கும் ஞானத்தையும், விவேகத்தையும் அளித்தருளும்.

எல் : எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

குரு : மக்கள் அனைவரும் சமுதாய சமாதானத்திலும் சமய ஒற்றுமையிலும் சகோதரர்களைப் போல் வாழ்க்கை நடத்த

எல் : எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

குரு : இந்த நவநாள் பக்தி முயற்சிகளைச் செய்யும் இளைஞர்களும், இளம் பெண்களும் தங்கள் எதிர்கால வாழ்வைத் தெரிந்து கொள்வதில் பரிசுத்த ஆவி அவர்களுக்கு வழிகாட்ட

எல் : எங்கள் தாய் மரியின் மூலம்;, ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

குரு : இந்த நவநாள் பக்தர்கள் உமது திருவுளத்தின்படி தங்கள் உடல்நலத்தில் நீடிக்கவும் நோயாளிகள் தங்கள் உடல்நலத்தை திரும்ப அடையவும்.

எல் : எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

குரு : மரித்த நவநாள் பக்தர்களுக்கும் மற்ற விசுவாசிகளுக்கும் நித்திய இளைப்பாற்றியைத் தந்தருள

எல் : எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

குரு : இந்த நவநாளில் முக்கிய கருத்துக்களுக்காகவும் இங்கு கூடியிருக்கும் அனைவருடைய தேவைகளுக்காகவும்.

எல் : எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

குரு : மக்கள் அனைவரும் உமது உண்மையின் ஒளியைக் காணவும், உமது அன்பின் ஆர்வத்தை உணரவும் வேண்டுமென்று

எல் : எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

குரு : நமது இடைவிடா சகாயத்தாயிடம் நம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விண்ணப்பங்களையும் மௌனமாக எடுத்துக்கூறுவோம். (சிறிது நேரம் மௌனமாக செபிப்போம்)

(நன்றியறிதல்)
குரு : நீர் எங்களுக்கு புதிய அருள் வாழ்வை அளித்ததற்காக, ஆண்டவரே எங்கள் நன்றியறிதலை ஏற்றுக்கொள்ளும்.

எல் : எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

குரு : திருச்சபையின் தேவதிரவிய அனுமானங்களின் வழியாக நாங்கள் பெற்றுக்கொண்ட எல்லா வரங்களுக்காகவும்

எல் : எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

குரு : இந்த நவநாள் செய்வோர் பெற்றுக்கொண்ட ஆத்மசரீர நன்மைகளுக்காக

எல் : எங்கள் தாய் மரியின் மூலம், ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

குரு : நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அடைந்துள்ள உதவிகளுக்காக நமது இடைவிடா சகாயத்தாய்க்கு மௌனமாக நன்றி செலுத்துவோமாக.

( சிறிது நேரம் மௌன நன்றியறிதல் )

பாடல் (நிற்கவும்)

தாயே மாமரி இன்றுன்
சகாயம் தேடினோம் - தாயே மாமரி
உலக மெத்திசையும்
மக்கள் போற்றிடும் புகழ் - அரும்
உம் அற்புத படமுன் வந்து நிற்கும் எங்களை
கடைக்கண் நோக்குவீர் - தாயே மாமரி

வேதாகமத்திலிருந்து வாசகம்
(நிற்கவும்)
மறையுரை (உட்காரவும்)

8 நோயாளிகளை ஆசீர்வதித்தல்
(முழந்தாளிடவும்)

குரு : செபிப்போமாக;

எல் : ஆண்டவரே! உடல் நோயால் வருந்தும் உமது ஊழியரைப் பாரும் ' நீர் உண்டாக்கிய ஆன்மாக்களுக்கு ஆறுதல் தாரும் ' நாங்கள் துன்பங்களினால் தூய்மையடைந்து ' உமது இரக்கத்தினால் விரைவில் குணமடையும்படி அருள் புரிவீராக ' எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் பெயராலே, ஆமென்.

குரு : (வலது கரத்தை நீட்டி) ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து உங்களைப் பாதுகாக்க உங்கள் நடுவிலும், உங்களைக் காப்பாற்ற உங்களுக்குள்ளும், உங்களுக்கு வழிகாட்ட உங்களுக்கு முன்னும், உங்களுக்கு காவலாயிருக்க உங்களுக்கு பின்னும், உங்களை ஆச{ர்வதிக்க உங்கள் மேலும் இருப்பாராக. புpதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே,
எல் : ஆமென்.

குழுவினர் விசுவாசம்
குரு : இங்கே கூடியிருப்பவர்களின் விசுவாச அறிக்கை.

எல் : ஓ! இடைவிடா சகாயத்தாயே ' நீர் அருள் நிறைந்தவள் ' தாராள குணமும் உடையவள் ' இறைவன் எங்களுக்கு அளிக்கும் வரங்கள் அனைத்தையும் பகிர்ந்தளிப்பவள் நீரே ' பாவிகளின் நம்பிக்கை நீரே ' அன்புள்ள அன்னையே உம்மை நோக்கி திரும்பும் எம்மிடம் வாரும் ' உமது கரங்களில் இரட்சண்யம் உண்டு ' நாங்கள் உமது கரங்களில் ஒப்படைக்கப் பட்டிருக்கிறோம் ' நாங்கள் உமது பிள்ளைகள் ' அன்பு நிறைந்த அன்னையே எங்களை பாதுகாத்தருளும் ' ஏனெனில் உமது பாதுகாவலில் இருந்தால் எங்களுக்கு பயமில்லை. கிறிஸ்து நாதரிடமிருந்து எங்களுக்கு பாவ மன்னிப்பை பெற்றுத் தருகிறீர். கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கும் நீர் ' நரகத்தைவிட சக்தி நிறைந்தவளாயிருக்கிறீர் உமது திருக்குமாரனும் எங்கள் சகோதரருமான கிறிஸ்து நாதர் எங்களைத் தீர்வையிட வரும்போது நீர் எம் அருகில் இருப்பீர் என்று எதிர்பார்க்கிறோம். சோதனை வேளையில் உமது சகாயத்தை தேட அசட்டை செய்வதால் ' எங்கள் ஆத்துமத்தை இழந்து விடுவோமோ என்று பயப்படுகிறோம் ' ஓ இடைவிடா சகாயத்தாயே எங்கள் பாவங்களுக்கு மன்னிப்பையும் ' கிறிஸ்துநாதரிடம் அன்பையும் இறுதிவரை நிலைத்திருக்கும் வரத்தையும் ' என்றும் உமது சகாயத்தை நாடும் மனதையும் ' உமது திருக்குமாரனிடமிருந்து பெற்றுத்தாரும்.

மகிமை நிறைந்த மங்கள வார்த்தை செபம் (நிற்கவும்)

குரு : எக்காலக் கிறிஸ்தவர்களோடும் நாமும் ஒன்றித்து மரியன்னையைப் புகழுவோமாக, வல்லமைமிக்க அவளது பாதுகாப்பில் நம்மை ஒப்படைப்போமாக.

எல் : அருள் நிறைந்த மரியே வாழ்க ' கர்த்தர் உம்முடனே ' பெண்களுக்குள் ஆச{ர்வதிக்கப்பட்டவள் நீரே ' உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ' ஆச{ர்வதிக்கப்பட்டவரே ' அர்ச்சிய:;ட மரியாயே சர்வேசுரனுடைய மாதாவே, பாவிகளாயிருக்கிற எங்களுக்காக ' இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும், - ஆமென்.

குரு : இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக.

எல் : சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குரு : செபிப்போமாக ஓ! ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே! உமது தாயாகிய மரியம்மாளை, அவருடைய அற்புதச் சாயலை வணங்கும் எங்களுக்கு என்றும் உதவிசெய்ய தயாராக இருக்கும் மாதாவாகக் கொடுத்திருக்கிறீரே! ஆவருடைய தாய்க்குரிய சலுகைகளை தேடுகிற நாங்கள் உமது இரட்சண்யத்தின் பேறுபலன்களை நித்தியத்துக்கும் அனுபவிக்கும் பாக்கியவான்கள் ஆகும்படி எங்களுக்கு கிருபை செய்தருளும். என்றென்றும் சீவித்து ஆட்சி புரியும் சர்வேசுரா.

எல் : ஆமென். (பாடவும்)

சதா சகாயமாதாவுக்கு புகழ்மாலை
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே, கிருபையாயிரும்
சுவாமி, கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும்.
புரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
அர்ச்சியஸ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

உற்சாக நம்பிக்கை ஊட்டும் உயர்திரு நாமம் உடைத்தான இடைவிடா சகாய மாதாவே,
எனக்கு சகாயமாக வாரும் சகாயமாதாவே
ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த பரிசுத்த மரியாயே
நான் சோதனையில் அகப்பட்டுத் தத்தளிக்கும் ஆபத்தான வேளையில் நான் அதனை ஜெயம் கொள்ளும்படி ...
எங்களுடைய முழுமனதுடன் இயேசுவை நேசிப்பதற்கு ...
நான் யாதொரு பாவத்தில் விழும் நிர்ப்பாக்கியத்துக்கு உள்ளாவேனாகில் அதினின்று தப்பி சீக்கிரம் எழுந்திருக்கும்படி...
பசாசின் ஊழியத்தில் ஈடுபடும் படியான சகாத தளையில் நான் சிக்கிக் கொள்வேனாகில் அத்தளையை தகர்த்தெறியும்படி ...
தீவிர பக்தி உருக்கமில்லாமல் வெதுவெதுப்பான சீவியம் சீவிப்பேனாகில் நான் சீக்கிரம் ஞான உ:;ணம் கொள்ளும்படி ...
நான் அடிக்கடி தேவதிரவிய அனுமானங்களைப் பெறுவதிலும் கிறிஸ்தவப் பக்திக்குரிய கடமைகளைப் பக்தியாய் செய்வதிலும் ..
வியாதியின் வருத்தத்தால் தளர்ந்த என் இருதயம் பலவீனமாய் இருக்கும்போது ...
என் சீவியத்தில் வரும் துன்ப சோதனைகளிலும் ...
என்னுடைய சுபாவ துர்செய்கைகளோடு நான் போராடும் வேளைகளிலும், நன்னெறியில் கடைசி வரைக்கும் நிலை நிற்கும்படி நான் செய்யும் முயற்சிகளிலும் ...
என்னைப் பாவத்தில் வீழ்த்த பசாசுக்கள் செய்கிற துஷ்டத்தனத்தினாலும் தந்திரத்தினாலும் என்பலம் குறைந்து போகும்போது ...
இவ்வுலகில் உள்ளதெல்லாம் என்னைக் கைவிட நான் கடைசி மூச்சை வாங்கி என் ஆத்துமம் என் சரீரத்தை விட்டுப் பிரியப் போராடும் போது ...
உம்மை நான் எப்பொழுதும் நேசித்து, ப+ஜித்து, சேவித்துப் பிரார்த்திக்கும்படி ...
ஓ! என் தேவதாயாரே என் கடைசிநாள பரியந்தம் என் கடைசி மூச்சு பரியந்தம் ...

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய
செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய
செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய
செம்மறிப் புருவையாகிய இயேசுவே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

செபிப்போமாக

சர்வ வல்லமையும், தயாள சமுத்திரமுமாகிய சர்வேசுரா சுவாமி! மனுக்குலத்திற்குத் துணைபுரியும் வண்ணம் ஆச{ர்வதிக்கப்பட்ட கன்னிமரியாவை உமது ஏகக் குமாரனுக்கு மாதாவாக்கத் திருவுளமானீரே! இவருடைய வேண்டுதலால், அடியோர்கள் பாவ கொள்ளை நோயைத் தீர்த்து பரிசுத்தமான இருதயத்தோடு உம்மை சேவிக்கும் வரத்தை எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து நாதர் வழியாக எங்களுக்கு கட்டளையிட்டருளும்படி தேவரீரை மன்றாடுகிறோம். -ஆமென்.

மூவேளை செபம்

ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார். அவளும் தூய ஆவியினால் கருத்தரித்தாள்.
அருள் நிறைந்த...

இதோ ஆண்டவருடைய அடிமை உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்
அருள் நிறைந்த...

வார்த்தை மனுவுருவானார் நம்மிடையே குடிகொண்டார்.
அருள் நிறைந்த...

முதல்வர்: கிறிஸ்துவிள் வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் தகுதியுடையவர்களாய் இருக்கும்படியா
எல்லோ: இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக மன்றாடும்.

செபிப்போமா

இறைவா உமது திருமகன் கிறிஸ்து மனுவுருவானதை உமது வானதூதர் வழியாக அறிந்திருக்கிறோம். அவருடைய பாடுகளினாலும் சிலுவையினாலும் நாங்கள் உயிர்ப்பின் மகிமையை அடையுமாறு உமது அருளை எங்கள் உள்ளத்தில் பொழிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

உத்தம மனஸ்தாப செபம்

சர்வேசுரா சுவாமி ! தேவரீர் அளவில்லாத சகல நன்மையும் நிறைந்தவராகையால் எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழுமனதோடு நேசிக்கிறேன். இப்படிப்பட்ட தேவரீருக்கு பொருந்தாத பாவங்களைச் செய்தேனே என்று மிகவும் மனம் நொந்து மெத்த மனஸ்தாபப்படுகிறறேன். எனக்கிதுவே மனத்தாபமில்லாமல் வேறு மனத்தாபமில்லை. எனக்கிதுவே துக்கமில்லாமல் வேறு துக்கமில்லை. இனிமேல் ஒருபோதும் இப்படிப்பட்ட பாவங்களை செய்வதில்லையென்று உறுதியான மனதுடனே பிரதிக்கினை செய்கிறேன். மேலும் எனக்கு பலன் போதாமையால் இயேசுநாதர் சுவாமி பாடுபட்டு சிந்தின திரு இரத்த பலன்களை பார்த்து என் பாவங்களையெல்லாம் பொறுத்து எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருளுவீரென்று முழுமனதோடு நம்பியிருக்கிறேன் திருச்சபை விசுவசித்து கற்பிக்கிற சத்தியங்களையெல்லாம் தேவரீர் தாமே அறிவித்தபடியினாலே நானும் உறுதியாக விசுவசிக்கிறேன். -ஆமென்.

சுருக்கமான உத்தம மனஸ்தாப செபம்

என் சர்வேசுரா சுவாமி ! தேவரீர் அளவில்லாத நன்மையும் அன்பும் நிறைந்தவராய் இருப்பதினால் என் பாவங்களால் உமக்கு செய்த துரோகத்திற்காக உத்தம மனஸ்தாபப்படுகிறேன். இனி உமது வரப்பிரசாதத்தின் உதவியால் இப்பேர்ப்பட்ட பாவங்களை செய்வதில்லை என்று உறுதியான பிரதிக்கினை செய்கிறேன். -ஆமென்.

இயேசுவை நோக்கி இரக்கத்திற்கான ஜெபம்

ஆண்வராகிய இயேசுவே, எங்கள் மேல் இரக்கம் வையும். எங்கள் மேல் இரக்கமாயிரும். எங்களைத் தீர்ப்பிடாதேயும். எங்கள் மூதாதையர், எங்கள் சகோதர, சகோதரிகள் வழி வந்த எல்லாக் குற்றங் குறைகளையும், பாவங்களையும், மன்னித்தருளும். எங்களுக்கு வரப்போகும் தண்டனையை விலக்கி விடும். எங்களை உமது சொந்தப் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டு உமது ஆவியால் எங்களை வழி நடத்தியருளும்.

இயேசு நாதருடைய திருஇருதயத்துக்கு தங்கள் குடும்பங்களை ஒப்புக் கொடுக்கிற ஜெபம்

இயேசுவின் திரு இருதயமே! கிறிஸ்துவ குடும்பங்களுக்கு தேவரீர் செய்து வரும் சகல உபகாரங்களையும், சொல்ல முடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறோம். நேசமுள்ள இயேசுவே! எங்கள் குடும்பங்களிலுள்ள சகலரையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். தேவரீர் எங்களை ஆசீர்வதித்து, இப்போதும் எப்போதும் உமது திரு இருதய நிழலில் நாங்கள் இளைப்பாறச் செய்தருளும்.தவறி எங்களில் யாராவது உமது திரு இருதயத்தை நோகச் செய்திருந்தால் அவர் குற்றத்துக்கு நாங்கள் நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திரு இருதயத்தைப் பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக் கொண்டு அவருக்கு கிருபை செய்தருளும்.இதுவுமன்றி உலகத்திலிருக்கும் எல்லா குடும்பங்களுக்காகவும் உம்மை மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமும், விருத்தாப்பியருக்கு ஊன்று கோலும், விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்குத் தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள், அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டில் தேவரீர் தாமே விழித்துக் காத்திருப்பீராக. இயேசுவின் இரக்கமுள்ள திரு இருதயமே! சிறு பிள்ளைகளை நீர் எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தீரே, இந்த விசாரணையிலுள்ள சகல பிள்;ளைகளையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும். அவர்களுடைய இருதயத்தில் விசுவாசத்தையும் தெய்வ பயத்தையும் வளரச் செய்யும். ஜீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் மரணசமயத்தில் ஆறுதலாகவும் இருக்கும்படி உம்மை மன்றாடுகிறோம். திவ்விய இயேசுவே, முறை முறையாய் உமது திருச்சிநேகத்தில் ஜீவித்து மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாற கிருபை புரிந்தருளும். - ஆமென்.

ஆபத்தான வேளையில்அன்னையை நோக்கி ஜெபம்

நிரந்தர சகாயத்தின் நேச ஆண்டவளே! மாசணுகாத்தாயே உம்மை நாங்கள் இவ்வீட்டின் ஆண்டவளாகவும், எஜமாட்டியாகவும் தெரிந்து கொள்கிறோம். கொள்ளை நோய், இடி, மின்னல் புயல் காற்றிலிருந்தும் விமானத்தாக்குதல் விரோதிகளின் பகை குரோதத்திலிருந்தும் இவ்வீட்டைப் பாதுகாத்தருளும், மிகவும் அன்புள்ள தாயே! இங்கு வசிக்கிறவர்களை ஆதரியும். அவர்கள் இங்கிருந்து வெளியில் போகும் போதும், உள்ளே வரும் போதும் அவர்களுக்குத் துணையாயிருந்து சடுதி மரணத்தினின்றும் அவர்களை இரட்சியும், எங்களை சகல பாவங்களிலும் ஆபத்துக்களிலும் நின்றும் காப்பாற்றும். இவ்வுலகில் நாங்கள் சர்வேஸ்வரனுக்கு பிரமாணிக்கமாய் ஊழியம் செய்து உம்மோடு கூட நித்தியத்திற்கும் அவரின் இன்பமான தேவ தரிசனத்தை அடைந்து சுகிக்க எங்களுக்காகப் பிரார்த்தித்தருளும் தாயே! - ஆமென்.

வேளாங்கன்னி மாதாவுக்கு நவநாள் செபம்

மகா பரிசுத்த கன்னிகையே, இயேசுவின் தாயாராயிருக்குமாறு நித்தியமாக பரிசுத்த மூவொரு கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட தூய மணியே! குடவுளுடைய திருப்புதல்வன் உமது திரு உதரத்தில் அவதாரமான போதும், ஒன்பது மாதமளவாக அவரை உமது மாசணுகாத கருவில் தாங்கிய போதும், நீர் அடைந்த பேரின்பத்தை உமது ஏழை ஊழியனாகிய அடியேன் உமக்கு நினைவூட்டுகிறேன். எனது அன்பினாலும், செபங்களாலும் நீர் அப்போது அனுபவித்த இன்பத்தை மீண்டும் புதுப்பிக்கவும் கூடுமானால் அதிகரிக்கவும் விரும்புகிறேன். துன்பப்படுகிறவர்களுக்கு இரக்கம் மிகுந்த அன்னையே! நீர் அப்போது அனுபவித்த இப்பெருமகிழ்ச்சியைக் கொண்டாடுபவர்களுக்கு நீர் வாக்களித்துள்ள விசே: உதவியையும், பாதுகாப்பையும் எனக்கு இத்துன்ப நேரத்தில் தந்தருளும். உமது தெய்வப் புதல்வனுடைய அளவற்ற வல்லமையில் நம்பிக்கை கொண்டுள்ளேன். கேட்பவருக்கு அளிப்பதாக அவர் தந்த வாக்குறுதியை நினைத்து, உமது பெரும் வல்லமை நிறைந்த மன்றாட்டுக்களில் உறுதி கொண்டுள்ளேன். இந்த நவநாளின் போது நான் செய்யும் விண்ணப்பங்களை கடவுளுடைய திருச்சித்தத்திற்கு ஏற்றவையானால் அவரிடம் பரிந்து பேசி அடைந்து தந்தருளும். நான் கேட்கும் மன்றாட்டுகள் கடவுளுடைய திரு விருப்பத்திற்கு மாறானதாயிருந்தால் எனக்கு எவ்வரம் மிகவும் தேவையோ அதையே அடைந்து தந்தருளும்.

(இங்கு உம்மன்றாட்டு இன்னதெனச் சொல்லவும்)

தேவனின் தாயே! இப்போது உமக்கு வணக்கமாக நான்செய்யும் இந்நவநாளை உம்மில் நான் கொண்டிருக்கும் பெரும் நம்பிக்கையை காட்டுவதற்காகவே செய்கிறேன். இயேசு மனிதனான போது உமது திரு உள்ளம் அடைந்த தெய்வீக மகிழ்ச்சியை நினைத்து அதற்கு வணக்கமாக நான் செய்யும் இந்நவநாளையும் இப்போது நான் சொல்லப் போகும் அருள் நிறை செபத்தையும் அன்புடன் ஏற்றுக் கொள்ளும்.

(இங்கு அருள் நிறை செபத்தை ஒன்பது முறை சொல்லவும்)

கடவுளின் மாட்சி பெற்ற அன்னையே! அருள் நிறைந்தவள் என முதன் முதல் அதிதூதர் கபிரியேல் சொன்னபோது கொண்டிருந்த பணிவு வணக்கத்துடன் நானும் இவ்வாழ்த்துல்களைக் கூறுகிறேன். ஏற்றுக் கொள்ளும். நீர் அணிந்திருக்கும் முடியில் என் செபங்கள் அத்தனையும் விண்மீன்களெனத் துலங்குமாறு விரும்புகிறேன். வருந்துவோருக்கு ஆறுதலே, நான் உம்மிடம் இப்போது மன்றாடும் விண்ணப்பங்கள் நிறைவேறுமாறு உமக்கு வணக்கமாக இதுவரை பரிசுத்தவான்களால் செய்யப்பட்ட எல்லாப் புனித செயல்களையும் ஒப்புக் கொடுக்கிறேன். உமது திரு மகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு நாதருடைய திரு இருதயத்தில் பொங்கி வழியும் பேரன்பையும் அது போன்ற உமது அன்பையும் பார்த்து, ஏழையான எனது செபத்தை ஏற்று என்மன்றாட்டை அடைந்து அடைந்து தந்தருளும் தாயே! - ஆமென்.

திவ்விய சந்தமரிய தஸ்நேவிஸ் ஆண்டவளுக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் ஜெபம்

எங்கள் இருதய கமலாயங்களில் மேலான கிருபாசனங்கொண்டு எழுந்தருளியிருக்கிற திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! பரலோக பூலோக அரசியே! கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே! பாவிகளின் தஞ்சமே! உமது இன்பமான சந்திதானம் தேடி வந்தோம். உம்முடைய கருணையை வேண்டிவந்தோம். உம்முடைய திருமுக மண்டலத்தை அண்ணாந்து பார்த்து உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் தாயே! உலகில் எங்கள் ஆண்டவள் நீரல்லவோ! எங்கள் அன்பான அன்னை நீரல்லவோ! எங்கள் ஆதரவும், சந்தோஷமும் எங்கள் நம்பிக்கையும் நீரல்லவோ! நீர் எங்களுடைய தாயார் என்பதை எங்களுக்கு காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை மாதா பாராட்டுவாளோ? உம்மைத்தேடி வந்த நிர்ப்பாக்கியருக்கு உதவியாயிரும். அழுகிறபேர்களை அரவணையும். அல்லல் படுகிறவர்களுக்கு ஆறுதலாயிரும். நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்? நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார்? நீர்; ஆதரிக்காவிட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? தஞ்சமென ஓடி வரும் அடியோர் மேலே தயவாயிரும். தயை கடலே தவித்தவருக்குத் தடாகமே! தனித்தவருக்கு தஞ்சமே. உம்முடைய சந்நிதானம் தேடிவந்தோம். ஆறு, காடுகளைக் கடந்து ஓடி வந்தோம். துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளாலே வாடி நொந்தோம். எங்கள் நம்பிக்கை வீண்போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் வேண்டுதல் பலனற்றதாய் போகுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இருதயத்தை உருக்காது போகுமோ? அப்படி ஆகுமோ அம்மா? அன்பான அம்மா! அருமையான அம்மா! அடியோருக்கு அன்பான அம்மா! தஸ்நேவிஸ் மரியே அம்மா! எங்கள் குடும்பங்களை முழுதும் இன்று உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். எங்களை ஏற்று ஆசீர்;வதித்தருளும் தாயே - ஆமென்.

புனித சூசையப்பருக்கு செபம்

புனித சூசையப்பரே! உம் அடைக்கலம் மிகவும் மகத்தானது. வல்லமை மிக்கது. இறைவனின் சந்நிதியில் உடனடி பலன் அளிக்க வல்லது. ஏனவே என் ஆசைகளையும், எண்ணங்களையும் உம் அடைக்கலத்தில் வைக்கிறேன்.

உம் வல்லமை மிக்க பரிந்துரையால் உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய சேசுவிடம் எங்களுக்குத் தேவையான எல்லா ஆன்ம நலன்களையும் பெற்றுத்தாரும். இதன் வழியாக மறு உலகில் உமக்குள்ள ஆற்றலைப் போற்றி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு நன்றியும், ஆராதனையும் செலுத்தக் கடவேன். புனித சூசையப்பரே! உம்மையும் உம் திருக்கரங்களில் உறங்கும் சேசுவையும் சதா காலமும் எண்ணி பூரிப்படைய தயங்கியதில்லை. இறைவன் உம்மார்பில் சாய்ந்து தூங்கும் வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. உம் மார்போடு அவரை என் பொருட்டு இணைத்து அணைத்துக் கொள்ளும். என் பெயரால் அவருக்கு நெற்றியில் முத்தமிடும். நான் இறக்கும் தருணத்தில் அந்த முத்தத்தை எனக்குத் தரும்படி கூறும். மரித்த விசுவாசிகளின் ஆன்ம காவலனே எங்களுக்காக மன்றாடும். - ஆமென்.

வல்லமை மிக்க செபம்

நெஞ்சுக்கும் மார்புக்கும் நிறைந்த சிலுவை! நீச பிசாசுகளை விரட்டிடும் சிலுவை - சிலுவை அடியில் தலையை வைத்தேன். திருவிரலால் உடலை வைத்தேன். எனக்கு உதவியாக வாரும் திருச்சிலுவை ஐயாவே! - ஆமென்.

குருசான குருசே!
கட்டுண்ட குருசே!
காவலாய் வந்த குருசே!
தொட்டியிலும், தண்ணீரிலும், சிங்கார மேடையிலும், துன்பப்படுத்தும் பிசாசுகளையும், எங்களை அறியாமல் எங்களுக்குத் தீமை செய்கிறவர்களையும் துரத்தி விடும் சிலுவையே! மூன்றாணி! மூன்றாணி! மூன்றாணி!

தூய அந்தோணியாரை நோக்கிபொது மன்றாட்டு

எங்கள் பாதுகாவலரான தூய அந்தோணியாரே, இறைவனின் அன்புள்ள அடியாரே கிறிஸ்து பாலகனை கையில் ஏந்தும் பேறுபெற்ற தூயவரே, திருமறையை ஆர்வமுடன் போதித்த சிறந்த போதகரே தப்பறைகளை தகர்த்தெறிந்த வித்தகரே, இறைவனின் தனி அருளால் அலகையை ஓட்டுபவரே, துன்புறுவோரின் துயர் துடைப்பவரே, பாவியராகிய நாங்கள் உமது உதவியை நாடி உம்மிடம் ஓடி வந்தோம்.

புதுமை வரம் பெற்றிருக்கும் எம் ஞானத்தந்தையே! நம்பிக்கையுடன் உம்மிடம் ஓடி வந்துள்ள உம் பிள்ளைகளின் மனறாட்டுக்களை கேட்டருளும். உமது ஆதரவை நாடி வந்துள்ள உம் அடியார் எம்மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். துன்பம், பிணி, வறுமை, சிறுமை ஆகியற்றால் வாடி வந்திருக்கும் எங்களுக்கு உதவியருளும். அழுவோரின் கண்;ணீரைத் துடைத்தருளும். நோயாளிகளுக்கு உடல் நலம் கொடுத்தருளும். எங்கள் அன்புக்குரிய தூய அந்தோணியாரே! இறைவனின் திருவுளப்படி எப்பொழுதும் நீர் நடந்தது போல நாங்களும் இன்பத்திலும் துன்பத்திலும் எப்பொழுதும் அவரது திருவுளத்துக்கு இசைந்து நடக்கவும், நீர் தூய வாழ்வு வாழ்ந்தது போல, நாங்களும் ஒருவருக்கும் வஞ்சகம் நினையாமலும், செய்யாமலும் தீமையை அகற்றி புனிதராய் வாழவும், திருச்சபை தளைக்கவும், நாடு செழிக்கவும், நாங்கள் நேர்மையுடன் உழைக்கவும், மக்கள் யாவரும் மெய்யங்கடவுளைக் கண்டறிந்து, தக்க முறையில் அவரை வழிபடவும் எங்களுக்காக இயேசுவை வேண்டியருளும்.

எங்களையும் எங்கள் குடும்பங்களையும், எங்கள் தொழில் முயற்சிகளையும், உழைப்பினையும் ஆசீர்வதித்தருளும். எங்கள் விண்ணப்பங்கள் நிறைவேற எங்களுக்காக இறைவனை மன்றாட வேண்டுகிறோம். - ஆமென்.

கண் நோய் தீர்க்கும்புனித பிரகாசியம்மாளுக்கு ஜெபம்

கன்னிகையும் வேத சாட்சியுமான பக்தி மிகுந்த புனித பிரகாசியம்மாளே! நீர் இறைவனிடம் பெற்றுக்கொண்ட அருட்பலத்தால் இளமையிலே புண்ணிய வழியில் நடந்து தெய்வீக அழகு பெற்றுத் திகழ்ந்தீரே, உமது கன்னிமையை ஆண்டவராகிய இயேசுவுக்கு அர்ப்பணித்து, பெருந்துன்ப துயரங்கள் உம்மைத் தாக்கிய போதும் அசையாத தூணாக நின்று கன்னிமையை களங்கமில்லாமல் காத்து உமது ஆத்துமத்தை அவருக்குக் கையளித்தீரே, சீர்கூசா நகரத்தின் மகிமையும், அடைக்கலமுமான கன்னிகையே, பக்தியுடன் உம்மை நாடிவரும் அனைவருக்கும் பல நன்மைகளையும் அற்புதங்களையும் ஆற்றி வரும் அற்புத வரத்தியே நீர் எங்களுக்காக இறைவனை மன்றாடி நாங்கள் ஞான ஒளி பெற்று பாவ வழிகளை விலக்கி, இயேசுவின் அன்புப் பாதையில் நடந்து இறுதியாய் மோட்ச பேரின்பம் அடைய வரம் பெற்றுத் தருவீராக!

(1 பர, 1அருள், 1திரி,)

புனித மிக்கேல் தேவதூதருக்குஜெபம்

அதிதூதரான புனித மிக்கேலே, யுத்த நாளில் எங்களைக் காப்பாற்றும் பசாசின் பட்டனத்திலும் கண்ணிகளிலும் நின்று எங்களை காத்தருளும். இறைவன் அதைக் கடிந்து கொள்ளும்படி தாழ்மையுடன் மன்றாடுகின்றோம். வானுலகசேனைக்கு அதிபதியாயிருக்கின்ற நீர்; ஆன்மாக்களை நாசஞ் செய்யும்படி உலகெங்கும் சுத்தித்திரியும் சாத்தானையும் மற்றும் பசாசுகளையும் தெய்வ வல்லமையைக் கொண்டு நரகபாதாளத்தில் தள்ளிவிடும்.
- ஆமென்.

புனித யூதாததேயுசை நோக்கி ஜெபம்

அப்போஸ்தலரும் வேத சாட்சியுமான புனித யூதாததேயுசே! நீர் நமது ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நெருங்கிய உறவினருள் ஒருவராயிருக்கிறீர்! புண்ணியத்திலும் புதுமை வரங்களிலும் மகா கீர்த்திப் பெற்றவர்! உம்மை மன்றாடுகிறவர்களுக்காகத் தவறாமல் மனுப் பேசுகிறீர்! திக்கற்றுத் தயங்குவோருக்கு விசே:ப் பாதுகாவலர் நீர்;! நம்பிக்கை இழந்தவர்களின் நம்பிக்கை நீர்! இந்த உமது வல்லபத்தில் நம்பிக்கை வைத்து இதோ நான் உம்மை நாடி வருகிறேன். எனக்கு மிகவும் அவசரமான இந்த வேளையில் உதவிப் புரியும்படி உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன். (வேண்டியதை விசுவாசத்துடன் கேட்கவும்)

ஓ! தயாள இருதய ததேயுசே! இனிமேல் உள்ள என் வாழ்நாட்களில் உம்மை எமது பாதுகாவலாக வணங்குவேன் என்றும், எங்கள் அவசரங்களில் உதவில் செய்ய, நீர் வல்லமை மிகுந்தவரும், தீவிரமாய் பரிந்து பேசுகிறவருமாய் இருக்கிறீர்; என்ற உமது பக்தியை மக்களிடையில் பரவச் செய்வேன் என்றும் உறுதியாய் வாக்களிக்கிறேன். புனித யூதாததேயுசே, எங்களுக்காகவும் உமது உதவியை மன்றாடும் அனைவருக்காகவும் வேண்டிக்கொள்ளும் - ஆமென்.
(ஒரு. பர, அருள், திரி)

குழந்தை சேசுவின் புதுமை நிறைந்த செபம்

அற்புத குழந்தை சேசுவே! அமைதி அற்ற எங்கள் உள்ளங்களின் மேல் உம் கருணைக் கண்களைத் திருப்பியருளுமாறு தாழ்ந்து, பணிந்து, வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் இந்த வரத்தை அளித்தருளுமாறு உம்மை இறைஞ்சுகிறோம். (வேண்டிய வரத்தை இங்கு குறிப்பிடுக)

எங்களை வாட்டி வதைக்கும் துன்ப துயரங்களையும், வேதனை, சோதனைகளையும், நீக்கி உம் குழந்தை திருப்பருவத்தின் பெயரால் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும். அதனால் உம் ஆறுதலையும் ஆதரவையும் பெற்று தந்தையோடும் தூய ஆவியோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்திப் போற்றுவோமாக! குழந்தை சேசுவே! என் செபத்தை ஏற்றருளும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். - ஆமென். தேர்வு எழுதுவோருக்காக ஜெபம்

ஞானத்தின் ஊற்றே இறiவா! எங்களின் இந்த இளம் வயதில் பல நன்மைகளை எங்களுக்குப் பொழிந்து வழிநடத்தி வந்த நேரங்களை நன்றியோடு நினைக்கிறோம்.. எங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வுகளை எழுதவிருக்கும் நாங்கள், இந்த இறுதி நாட்களில் எங்கள் பாடங்களைக் கடின முயற்சியுடன் படித்து, தேர்வுகளைச் சிறப்பாக எழுதி முடிக்கவும், அனைத்து தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறவும், தேவையான ஞானத்தையும், நினைவாற்றலையும், தெளிந்த மனதையும் உடல் உள்ள வலிமைகளையும் எங்களுக்கு கொடுத்தருளுமாறு உம்மைத் தாழ்மையோடு வேண்டுகிறோம். ஞானத்தின் இருப்பிடமே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். - ஆமென்.

புனித தந்தை பியோவுக்கு நவநாள் ஜெபம்

ஐந்து காய வரம் பெற்ற முதற்குருவே, புனித தந்தை பியோவே, அனைத்து ஆன்மாக்களும் விண்ணகம் சேர, தொடர்ந்து பரிந்து பேசி, பாவிகளை மனம் திருப்பி, பரமனிடம் சேர்க்க உறுதியளித்தவரே, நற்கருணை நாதரோடு ஒன்றித்த ஒப்பற்றவரே, செபமாலை பக்தியை சாத்தனை எதிர்க்கும் ஆயுதமாகக் கொண்டவரே, தவத்தை ஏற்று ஏழ்மை, தாழ்ச்சி, பிறரன்புப் புண்ணியங்களில் சிறந்து, இடைவிடா மன்றாட்டால் தீராத நோய்களைக் குணமாக்கும் வரம்பெற்ற வள்ளலே, எதிர்காலத்தை முன்னறிவிக்கும் இறைவாக்கினரே, ஐந்து காயங்களிலிருந்து நறுமணம் பரப்பும் நாயகரே, ஒரே நேரத்தில் இரு இடங்களில் தோன்றும் நல்லவரே, இறைவனால் இவ்வுலகுக்கு அருளப்பட்ட மாபெரும் புனிதரான தூய பியோவே, இதோ வேதனைகளோடும், பிரச்சனைகளோடும், தீராத நோய்களோடும், வாழ்க்கை சுமைகளோடும் உம்மை நாடி தேடி வரும் எங்களைக் கண்ணோக்கி பாரும். நாங்கள் விரும்பிக் கேட்கும் மன்றாட்டுக்களை (... . ) இறைவனிடம் பரிந்து பேசி தயவாய் எமக்கு பெற்றுத் தாரும்.

அகிலம் போற்றும் அற்புதத் தந்தை புனித பியோவே, இயேசுவின் ஐந்து காயங்களை தனது உடலில் சுமந்து, வேதனைகளை அனுபவித்து துன்பத்தில் இறைவனை உணர்ந்தவரே, நாங்களும் எங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்களை ஏற்று புனித வாழ்வு வாழவும், உலகிற்கு அமைதியைக் கொணரவும் தேவையான வரங்களை இறைமகன் இயேசுவிடமிருந்து பெற்றுத் தாரும். - ஆமென்.

புனித சவேரியாரின் சிலுவை ஜெபம்

ஓ! பரிசுத்த சிலுவையே எங்கள் ஏக நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறோம். ஓ! பரிசுத்த சிலுவையே இரக்கத்தின் தேவனே உமது அடியார்களாகிய எங்களையும் எங்கள் குடும்பங்களையும் காப்பாற்றியருளும்.

பரிசுத்த சிலுவைக்கு
நம்பிக்கை நவநாள்
பரிசுத்த சிலுவையே இந்த எனது வேண்டுதலை உமது மகா பரிசுத்த ஐந்து திருக்காயங்களில் நம்பிக்கையுடன் வைக்கிறேன்.
(இங்கே வேண்டுதலை குறிப்பிடவும்)

பரிசுத்த சிலுவையே எங்களையும் எங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் கண்ணோக்கி பார்த்தருளும். பின் உமது திருவுளப்படி ஆகட்டும், ஆண்டவரே உமது சித்தத்தை ஏற்றுக் கொள்கிறேன். உமது இரக்கத்துக்கு என்னையே கையளிக்கிறேன். திருச்சிலுவையே நீர் என்னை ஒருபோதும் கைவிடமாட்டீர். ஓ! பரிசுத்த சிலுவையே என்ஏக நம்பிக்;கையை உமது பேரில் வைக்கிறேன். பரிசுத்த சிலுவையே என் பேரில் உமக்குள்ள அன்பை விசுவசிக்கிறேன். பரிசுத்த சிலுவையே உமது இராச்சியம் வருக. ஓ! பரிசுத்த சிலுவையே நான் அநேக உதவி உபகாரங்களை உம்மிடம் கேட்டிருக்கிறேன். ஆனால் அனைத்து உதவிகளையும் உமதிடமிருந்து பெற்றிருக்கிறேன். அதற்காக இறைவனுக்கு முழு மனதுடன் நன்றி செலுத்துகிறேன். ஆனால் இப்பொழுது எனக்கு மகா அவசியமான இந்த விண்ணப்பத்திற்காக உருக்கமாக மன்றாடுகிறேன். அதை ஏற்று உமது ஐந்து திருக்காயங்களுக்குள் வைத்தருளும். நித்திய பிதா திரு இரத்தத்தால் மூடப்பட்டிருக்கும் இவ்விண்ணப்பத்தை பார்க்கும்போது அவர் அதை மறுக்கமாட்டார். பரிசுத்த சிலுவையே இனிமேல் அது என்னுடைய விருப்பமல்ல, உம்முடையதே. ஓ! பரிசுத்த சிலுவையே எனது நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன். என்னை ஒரு போதும் கலங்க விடாதேயும். ஆமென். (தினமும் ஜெபிக்கவும்)

அப்போஸ்தலரான புனித தோமையாரை நோக்கி செபம்

எங்கள் இந்திய நாட்டில் திருமறையைப் போதிக்க வரம் பெற்ற் புனித தோமையாரே, நீர் ஆண்டவர் மீது கொண்டிருந்த பற்றுதலால் அவரோடு இறக்கவும் துணிந்திருந்தீரே! காணாமல் நம்புவோரின் வீர விசுவாசத்தையும், சாவுக்கும் அஞ்சாத தீர அன்பையும், எங்களுக்குப் பெற்றுத் தந்தருளும். நீர் எங்கள் நாட்டில் திருமறையைப் போதித்து, அரும் அடையாளங்களால் எங்கள் முன்னோர்களில் கணக்கற்ற பேரை மெய் மறையின் ஒளிக்குக் கொண்டு வந்தீர்! இன்னும் இந்த நாட்டில் எங்கள் சகோதரர்களில் எத்தனை கோடிப்பேர் இயேசுவை அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் மனந்திரும்பி, இந்தியா முழுவதும் ஒரே மந்தையாய், கிறிஸ்துவின் அன்பரசின்கீழ் வருவது எப்போது? விசுவாசத்தில் உறுதியடைந்த அப்போஸ்தலரே, எங்கள் அனைவரையும் விசுவாசத்திலும் பக்தி ஒழுக்கத்திலும் உறுதிப்படுத்தி, எங்களில் துலங்கும் விசுவாசத்தின் ஞானஒளி எங்கும் பரவி, இந்தியா முழுவதும் கிறிஸ்து கொண்டு வந்த விடுதலையையும் அமைதியையும் பெற்று அவருடைய அரசின்கீழ் அணிவகுத்து நிற்கும்படியாக இறைவனை மன்றாட உம்மை வேண்டுகிறோம். ஆமென்.

திரு இருதய மன்றாட்டுமாலை

ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்

கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்

விண்ளகத்திலிருக்கிற தந்தையாம் இறைவா, எங்கள்மேல் இரக்கமாயிரும்.
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
தூய ஆவியாகிய இறைவா, எங்கள் மேல் இரக்கமாயிரும்.

என்றும் வாழும் பிதாவின் சுதனாகிய இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பரிசுத்த கன்னித்தாயின் உதிரத்தில் தூய ஆவியால் உருவான இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அளவற்ற மகத்துவப் பிரதாபம் நிறைந்த இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இறைவனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அதி உன்னத ஆண்டவரின் உறைவிடமான இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இறைவனின் இல்லமும் விண்ணக வாசலுமான இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அன்புத் தீ சுவாலித்தெரியும் சூளையான இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

நீதியும் நிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சகல புண்ணியங்களும் முழுமையாக நிறையப் பெற்ற இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எல்லா ஆராதனைப் புதழ்ச்சிக்கும் முற்றும் உரிய இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மைய இடமுமான இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஞானமும் அறிவும் நிறைந்த முழுநிறைச் செல்வமான இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இறைத்தம்மை முழுமையாக தங்கி வழியும் இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உம்மில் நிறைந்துள்ள நன்மைகளை நாங்கள் அனைவரும் போற்றி மகிழச் செய்யும் இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

நித்திய சகரங்களின் ஆசையாகிய இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பொறுமையும் மிகுந்த தயாளமும் உள்ள இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உம்மை மன்றாடி வேண்டும் அனைவருக்கும் நிறைவை அளிக்கும் தாராளமான இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

வாழ்வுக்கும் புனித நிலைக்கும் ஊற்றான இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எங்கள் பாவச் செயல்களால் வேதனையுற்று வருந்தின இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மரணம் வரையும் கீழ்படிந்திருந்த இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சர்வ ஆறுதல் அனைத்தின் ஊற்றாகிய இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எங்கள் உயிரும் உயிர்ப்புமான இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எங்கள் சமாதானமும் ஒற்றுமையின் இணைப்புமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பாவங்களுக்குப பலியான இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உம்மிடத்தில்; நம்பிக்கை வைக்கிறவர்களுடைய மீட்பரான இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எல்லா புனிதர்களின் ஆனந்தமாகிய இயேசுவின் திவ்விய இருதயமே,
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ! எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ! எங்களைத் தயை செய்து மீட்டருளும்.

முதல்வர் - இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே
துணைவர் - எங்கள் இருதயம் உமது இருதயத்துக்கு ஒத்திருக்கச் செய்தருளும்.

செபிப்போமாக:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உமது அன்புத் திருமகன் இருதயத்தையும் அவர் பாவிகளுக்காக உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் வணக்க புகழ்ச்சிகளையும் தயை கூர்ந்து கண்ணோக்கியருளும். உமது இரக்கத்தை மன்றாடுகிறவர்களுக்கு நீர் இரங்கி, மன்னிப்பளித்தருளும்.உம்மோடு தூய ஆவியின் ஐக்கியத்தில் என்றேன்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும், உம் திருமகனுமாகிய அதே இயேசுகிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்.

காணிக்கை செபம்

அத்தியந்த மகிமையுள்ள பரலோக இராசேஸ்வரியான பரிசுத்த தேவமாதாவே உம்முடைய திருபாதத்தை நாங்கள் நமஸ்கரித்து இந்தச் செபமாலைத் தியானத்தை உமக்குப் பாத காணிக்கையாக வைத்து ஒப்புக்கொடுக்கின்றோம். இதை நீரே கையேற்று உம்முடைய திருக்குமாரனிடத்திலே கையளித்து இதிலே நாங்கள் தியானித்த மறை நிகழ்ச்சிகளுடைய பலனை அடையவும் சுகிரேத போதனையின் படியே நடந்து இவ்வுலகத்திற் சகல விக்கினங்களும் நிவாரணமாகவும் பரலோகத்திலே உம்மோடே உம்முடைய திருக்குமாரனுடைய மோட்சமுக தரிசனையைக் கண்டு களிகூர்ந்திருக்கவும் ஒத்தாசை பண்ணியருளும் தாயாரே. -ஆமென்.

திரித்துவப் புகழ்/மூவொரு கடவுள் புகழ்

பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்தது போல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென் ஓ என் இயேசுவே எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து இரட்சித்தருளும். சகல ஆத்துமாக்களையும் பரலோக பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் அதிகமாய் வேண்டியவர்களுக்கு விசேட உதவி செய்தருளும்.

சிலுவை அடையாளம்

அர்ச்சியஸ்ட சிலுவைடையாளத்தினாலே எங்கள் சத்துருக்கள் இடத்திலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும் எங்கள் சருவேசுரா பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.

ஆறு இலட்சணங்கள்

1. சர்வேசுரன் தாமாயிருக்கிறார்
2. துவக்கமும் முடிவும் இல்லாமல் இருக்கிறார்
3. சரீரமில்லாமல் இருக்கிறார்
4. அளவில்லாத சகல நன்மையும் சுரூபியாயிருக்கிறார்
5. எங்கும் வியாபித்திருக்கிறார்
6. எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாயிருக்கிறார்

திவ்ய நற்கருணை ஆராதனை

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்ய நற்கருணைக்கு சதா காலமும் ஆராதனையும் ஸ்துதியும் தோஸ்திரமும் நமஸ்காரமும் உண்டாகக்கடவது.

பத்து கட்டளைகள்

சர்வேசுரன் நமக்கு அருளிச் செய்த வேத கற்பனைகள் பத்து
1. உனக்கு கர்த்தாவான சர்வேசுரன் நாமே; நம்மைத் தவிர வேறே சர்வேசுரன் உனக்கு இல்லாமல் போவதாக
2. சர்வேசுரனுடைய திருநாமத்தை வீணாகச் சொல்லாதிருப்பாயாக
3. சர்வேசுரனுடைய திருநாட்களை பரிசுத்தமாய் அனுசரிக்க மறவாதிருப்பாயாக
4. பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக
5. கொலை செய்யாதிருப்பாயாக
6. மோக பாவஞ் செய்யாதிருப்பாயாக
7. களவு செய்யாதிருப்பாயாக
8. பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
9. பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக
10. பிறர் உடைமையை விரும்பாதிருப்பாயக

இந்தப் பத்துக் கற்பணைகளும் இரண்டு கற்பனைகளில் அடங்கும்;
1. எல்லாவற்றிற்கும் மேலாக சர்வேசுரனை நேசிப்பது
2.தன்னைத் தான் நேசிப்பது போல பிறரையும் நேசிப்பது.

காவல் தூதரை நோக்கி செபம்

எனக்குக் காவலாய் இருக்கிற சர்வேசுரனுடைய சம்மனசானவரே ! தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து என்னைக் காத்து வழிநடத்தி ஆண்டருளும். -ஆமென்.

அனுதின வேலைகளை ஒப்புக் கொடுக்கும் செபம்

தெய்வீகத் தொழிலாளியாகிய இயேசுவே அடியேன் இன்று செய்யும் ஜெபங்களையும் தொழில்களையும் எனக்கு ஏற்படும் களைப்பு ஆயாசம் துன்ப வருத்தங்கள் அனைத்தையும் தொழிலாளிகளின் மனந்திரும்புதலுக்காகவும் அர்ச்சிப்புக்காகவும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன். -ஆமென்.

இயேசுவின் திரு இருதயமே உமது அரசு வருக !
நாசரேத்து அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தொழிலாளரின் மாதிரியாகிய புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உணவருந்துமுன் ஜெபம்

சர்வேசுரா சுவாமி! என்னையும் உமதருளினால் நான் உண்ணப்போகும் இந்த உணவையும் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து ஆசீர்வதித்தருளும் -ஆமென்

உணவருந்திய பின் ஜெபம்

சதாகாலத்துக்கும் நித்தியருமாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாயிருக்கிற சர்வ வல்லபமுள்ள இறைவா! தேவரிர் எனக்குத் தந்தருளின இந்த ஆகாரங்களுக்காகவும் தேவரிர்; எனக்குச் செய்துவருகிற சகல உபகாரங்களுக்காகவும் தேவரீருக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறேன். இப்பொழுதும் எப்போழுதும் ஆண்டவருடைய திரு நாமம் வாழ்த்தப்படக்கடவது.

ஜெபிப்போமாக சர்வேசுரா சுவாமி! எங்களுக்கு உபகாரம் பண்ணுகிறவர்களுக்கெல்லாம் நித்திய ஜீவியத்தைக் கட்டளையிட்டருள அனுக்கிரகம் பண்ணியருளும் சுவாமி -ஆமென் மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாரக் கடவது -ஆமென்

பிற்பகல் 3 மணிக்கு பொருத்தமான சிறு ஜெபம்

இயேசுவே! நீர் மரீத்தீர். ஆனால் இந்த மரிப்பு ஆன்மாக்களின் வாழ்க்கை ஊற்றாகவும், இரக்கத்தின் கடலுமாகவும், வழிந்தோடியது. ஓ! வாழ்வின் ஊற்றே! கண்டு பிடிக்க முடியாத இறைவனின் இரக்கமே! உலக முழுமையும் உம்முள் அடக்கி உமது இரக்கம் முழுமையும் எம்மீது பொழிந்தருளும். இயேசுவின் இதயத்திலிருந்து இரக்கத்;தின் ஊற்றாக வழிந்தோடும் இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.

வேலை துவங்குமுன் ஜெபம்

தூய ஆவியே தேவரீர் எழுந்தருளிவாரும். உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும். அவைகளில் சிநேக அக்கினியை மூட்டியருளும். உம்முடைய ஞானக் கதிர்களை வரவிடும். அதனால் உலகத்தின் முகத்தைப் புதுப்பிப்பீர்.

ஜெபிப்போமாக சர்வேசுரா சுவாமி! விசுவாசிகளுடைய இருதயங்களை பரிசுத்த ஆவியின் பிரகாசத்தால் படிப்பித்தருளினீரே. அந்த பரிசுத்த ஆவியினால் சரியானவைகளை உணரவும் அவருடைய ஆறுதலால் எப்பொழுதும் மகிழ்ந்திருக்கவும் அனுக்கிறகம் செய்தருளும். இவைகளையெல்லாம் எங்களாண்டவராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும் -ஆமென்.

வேலை முடிந்தபின் செபம்

சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே! இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலும் நாங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு நீர் பாராமுகமாயிராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சம் உடையவளுமாயிருக்கிற நித்திய கன்னிகையே சகலஆபத்துக்களிலேயும் நின்று எங்களை தற்காத்தருளும். -ஆமென்.

தேவன்னைக்கு ஒப்புக்கொடுக்கும் செபம்

என் ஆண்டவளே! என் தாயாரே! இதோ என்னை முழுமையும் தேவரீருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். தேவரீர் பேரில் அடியேன் வைத்த பக்தியைக் காண்பிக்கதக்கதாக. இன்றைக்கு என் கண் காதுகளையும் வாய் இருதயத்தையும் என்னை முழுமையும் தேவரீருக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். என் நல்ல தாயாரே நான் தேவரீருக்குச் சொந்தமாயிருக்கிற படியினாலே என்னை உம்முடைய உடமையாகவும் சுதந்திரப் பொருளாகவும் ஆதரித்துக் காப்பாற்றும். - ஆமென்.

Copyright © United Tamil Catholics 2014